"நீ" என்றாலே சுகம்தான்...!


நினைவுகளும் சுகம்தான் ... - அது
"உன்னுடையதாக" இருந்தால்...

கனவுகளும் சுகம்தான் ... - அதில்

கைப்பிடித்து "நீ" நடந்தால்...

அழுவதும் சுகம்தான் ... - அங்கே

ஆறுதல் கூற "நீ" இருந்தால் ...

தடுக்கி விழவும் சுகம்தான் ... - அங்கே

தாங்கிப் பிடிக்க "நீ" இருந்தால்...

தள்ளாடும் வயதும் சுகம்தான்... - அங்கே

கைத்தடியாய் "நீ" இருந்தால் ...

மரணமும் சுகம்தான் ... - அது

"உன்" மடியிலேன்றால் ....

இப்படிக்கு
உயிரை (உன்னை) நேரில் பார்த்தவன்

கற்றுக்கொடுத்தாள் . . .

அழுவதற்கு கற்றுக்கொடுத்தாள்
ஒரு நாளும் அழவிட்டதில்லை

கோபிக்க கற்றுக்கொடுத்தாள்
ஒருநாளும் கோபமூட்டியதில்லை

காதலிக்க கற்றுக்கொடுத்தாள்
யாரையும் காதலிக்கவிட்டதில்லை

இப்படி என்னை பாதி செதுக்கிகொண்டிருக்கும்போதே
பிரிந்து சென்றுவிட்டாள்
பிரிவை கற்றுக்கொடுகாமலே . . .

அரசியல் விபச்சாரம்...


அரசியல் விபசாரத்தில்
500 ருபாய் கொடுத்தல் உன்னோடு...
550 ருபாய் கொடுத்தல் அவனோடு...

தலைவன் இருக்கின்றான்...

உலக கோப்பை பாக்குறது தப்பில்ல. ஆனா அதுக்காக சோறு கூட திங்காம பிரம்மரிஷி மாதிரி டி.வி. முன்னாடி தவம் இருந்து பாக்குறது தப்புதான. அப்படிப்பட்ட கிரிக்கெட் ரசிகர்களுக்கு தலைவர் சொன்ன கலக்கல் கமெண்ட்:

நீயில்லாத வாழ்க்கையா?

கடலலைகள் நம் பெயரை அழித்ததையே
என் மனம் ஏற்க மறுக்கும்-இனி
எங்கனம் உன்னை மறக்கும்

கைகோர்த்து சென்ற இடமெல்லாம்
உன்னை கேட்டு நச்சரிக்கும்-இனி
கண்ணீர் மட்டுமே பதில்களை உச்சரிக்கும்

நித்தமும் புதிதாய் மலர்ந்ததை கண்டு
கோபம் கொண்ட பொறாமை மலர்களும்
என்னை கேலி செய்யும்-இனி
என்ன சொல்லி நான் ஜெயிக்க இயலும்

வழக்கமாய் அமரும் பூங்காவின் இருக்கைகளும்
என்னை பாவமாய் பார்க்கும்
நீ தான் காரணம் என சொன்னாலும் நம்பாமல்
நம் பழைய சண்டைகளை நினைவுப்படுத்தி
என் மேல் பழி போடும்

உயிரே
அழகிய மலர்வெளியில்
நெருஞ்சியை விதைத்தது யாரோ?
காலமும் மருந்தாகாத விஷத்தை
நம் காதலில் ஊட்டியதும் யாரோ?

காதலா!
வெற்று மனதில் காதலை நிறைத்து-இன்று
வெறுமையாக்கி விட்டது நீயடா
கண்ணீர் துடைப்பவனே-என்
கண்ணீருக்கு காரணமானதும் ஏனடா

மழை நீருடனும் கடல் நீருடனும்
கனவிலும் நினைவிலும்
வழியும் விழிநீரை
உன்னையன்றி யாரறிவார்

பூகம்பம் வந்தது போலும்
பிரளயம் கண்டது போலும்
என் மனம் சிதறி வெடித்தால்
நான் கண்ட சேதத்தை
எதை கொண்டு அளப்பாய்

காகிதத்தில் வடித்ததை எளிதில் எரிப்பாய்
என் இதய கல்வெட்டில் செதுக்கியதை
எவ்வாறு அழிப்பாய்

காதல் என்னும் சொர்க்கத்தில்
நான் கழித்த நாட்களையும்
பிரிவென்னும் துயர நரகில்
நான் தொலைத்த சந்தோஷத்தையும்
எப்படி மீட்டு தருவாய்

எல்லாம் இருந்தும் நீயில்லை
எல்லாரும் சூழ்ந்த போதும்-உன்
இடத்தை நிரப்ப ஆளில்லை

நகரும் நரக நாட்களிலும்
வதைக்கும் தனிமை இரவுகளுடனும்
சுட்டெரிக்கும் நிலவுடனும்
கலகம் செய்யும் தென்றலுடனும்
கானல் நீராய் போன உன்னை நினைத்து நினைத்து
என் உயிரும் மெல்ல மெல்ல மறைகிறது

என் காதலி

நினைக்கும் பொழுதிகளில்
கண்முன் தோன்றி
தவிக்கும் பொழுதுகளில்
தலை தடவி
ஆறுதல் சொல்லி
பாசம் என்னும்
செடியை வளர்த்து
சொந்தம் என்னும்
உறவை கொடுத்து
இன்பம் என்னும்
உணர்வை கொடுத்து
உயிரிலும் மேலான
நட்பைக் கொடுத்து
நட்சத்திரமாக
பிரகாசிக்கும் தோழியே
நீ வேண்டும் என்
வாழ்வின் எல்லை வரை...

ஆத்தா... கண்டுபிடுச்சுட்டேன்!!!!

invisible ல இருக்குறவங்கல கண்டுபிடிக்கணும்னு எவ்வளவோ ட்ரை பண்ணேன்... ஹூம்...ஹூம்ம்... நம்ம மூளைக்கு எட்டவே இல்ல . ஆனா நான் ஒளிஞ்சுருந்தா மட்டும் திருட்டுபயபுள்ளைக என்னைய கண்டுபிடிச்சு மூஞ்சுல இருக்குற மூக்கை வெட்டிட்டுதான் அடுத்தா வேலையே பாக்குறேங்குதுக :( சரி சும்மா விளையாடுதுகன்னு பதில் போடாம விட்டா கொலவெறியோட பதில் வந்துடும் “நீ ஒளிஞ்சுட்டு இருக்கன்னு தெரியும். ஒழுங்கா மரியாதையா வந்துடு”ன்னு :(

முடியல.....என்ன பண்ண? மூஞ்சை தொங்க போட்டுட்டு மனம் நிறையா அவமானங்களை தாங்கிட்டு பெரிய பல்ப்ஸ் நிறையா வாங்கி வச்சு வீடு தான் ப்ரகாசமா எறியுதே ஒழிய என் மூளை இன்னும் இருட்டாவே கெடக்கு!!!

இதுக்கு என்ன தீர்வுன்னு ராப்பகலா யோசிச்சேன். தூங்காமா யோசிச்சேன், சாப்பிடாம யோசிச்சேன், இவ்வளவு ஏங்க இன்னும் கொஞ்ச நாள் விட்டா பைத்தியமாவே போயிருப்பேனோ என்னவோ?!! (அப்படியாவது போயிருக்க கூடாதான்னு சொல்றதுலாம் கேக்குது. பிறவி பயனை அடைய வேண்டாவோ???). கீழ்பாக்கத்துல இடம் ரெடியாகிடுச்சுன்னு மெயில் வேற வருது. இது பத்தாததுக்கு என் ரங்க்ஸ் போறதா இருந்தா நீ ஏர்வாடிக்கு தான்போகணும். ஏன்னா அது தான் நான் அடிக்கடி பாக்க வந்துட்டு போக வசதியா பக்கத்துல இருக்குன்னு நக்கல் வேற!!!

வட போனாலும் பரவாயில்ல,கொள்க போனாலும் பரவாயில்லன்னு என் நோஸ் வச்சுருந்தவன்கிட்ட கிட்ட கெஞ்சி கூத்தாடி (இதுக்கு ரங்க்ஸ் ரெகமண்ட் மெயில் வேற) எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு கேட்டு அவரும் பாவப்பட்டு,பரிதாபப்பட்டு எனக்கும் சொல்லி கொடுத்துட்டார். நம்ம மனசு தான் திறந்த நிலை புத்தகமாச்சே!! அதான் அங்கே போட்டுக்க இடம் இல்லாம இங்கே வந்து கொட்டிக்கிறேன். தெரியாதவங்க அள்ளிக்கோங்கோ!! தெரிஞ்சவங்க கொஞ்சம் பாவம் புண்ணியம் பாத்து திட்டாம ஓரமா வேடிக்க மட்டும் பாருங்க. அப்படியும் முடியலன்னா எதையாவது ஒளறி கொட்டுங்க...ஒரே சமயத்துல பலபேர்கிட்ட திட்டு வாங்க என்னால முடியவே முடியாது!!!

படத்தை பாருங்க.



எதாவது புரியுதா? ம் ? சொல்லுங்க?? பாத்ததும் புரிஞ்சுருந்தா நீங்க புத்திசாலின்னுலாம் சொல்ல மாட்டேன். ஆனா புரியாம இருந்தா கீழ விளக்கத்த பாருங்க. ஆனா நீங்களும் என் இனம்னு ஒத்துக்கோணும் சரிங்களா கண்ணுகளா???




வேற பெருசா ஒன்னுமில்ல.

GO OFF THE RECORD பண்ணிக்கோங்க.
ஆப்லைன்ல இருக்குற பிரண்ட்க்கு ஹாய் சொல்லுங்க.
மெசேஜ்க்கு கீழ சிகப்பா எதாவது கம்யூட்டர் சொல்லுச்சுன்னா உண்மையிலேயே அவங்க ஸ்பாட்ல இல்லைன்னு அர்த்தம்.
அப்படிலாம் வராம வெறும் கருப்பு கலர் லெட்டர்ஸ் வந்தா ஆள் பதுங்கியிருக்குன்னு அர்த்தம் :)

அவ்வளவுதான்...!

சென்னை மாநகர பேருந்தில் நாம் நித்தமும் சந்திக்கும் அனுபவங்களின் தொகுப்பு...

சென்னைவாசிகளின் பூர்வ ஜென்ம பலனோ என்னவோ தெரியவில்லை. மணிக்கணக்கில் பேருந்துக்காக காத்திருந்தால் ஒன்று கூட வந்து தொலைக்காது. திடீரென ஒரே எண் உள்ள பேருந்துகள் அடுத்தடுத்து வரும். வடிவேலு சொல்வதுதான் நினைவுக்கு வரும்.. "லேட் ஆக்கிகிட்டே போறீங்க இல்ல. இருக்கட்டும். இந்த போக்குவரத்து துறை அமைச்சருக்கு போனு போட்டு ஒரு ஆட்டு ஆட்டுனாதான் இந்த சூனா பானா யாருன்னு தெரியும்".

ஆண்கள், பெண்கள் என சென்னை பேருந்துகளில் எழுதுவதை நிறுத்தினால் தேவலை. இளைஞர்களும், பள்ளி சிறுவர்களும் சில இம்சை பயணிகளிடம் படும் பாடு இருக்கிறதே. அனுபவித்து பார்த்தால்தான் தெரியும். மணிக்கணக்கில் காத்திருந்து பேருந்து வந்ததும் இருக்கையில் அடித்து பிடித்து இடம் பிடிப்பேன். உட்கார்ந்த அடுத்த சில நிமிடங்களில் எங்கிருந்தாவது ஒரு நடுத்தர வயது பெண் வருவார். கூட ஒரு பெண்ணையும் அழைத்து கொண்டு. அல்லது ஒரு நடுத்தர வயது ஆண் வருவார். மனைவியை அழைத்து கொண்டு. அவர்கள் என்னிடம் சொல்வது "தம்பி வேற எங்கயாவது உக்காருப்பா. நாங்க ஒண்ணா உக்காரணும்". திரும்பி பார்ப்பேன். பெண்கள் இருக்கை காலியாகத்தான் இருக்கும். ஆனாலும் அங்கு அமர மாட்டார்கள். சரி போகட்டும் என்று வேறு எங்காவது ஆண்கள் இருக்கையில் ஜன்னலோர இருக்கையில் அல்ல) அமர்ந்தால் அன்று இருக்குது எனக்கு தீபாவளி.

கூட்டம் சேர சேர நம் தோள்பட்டையில் தன் புட்டத்தை வைத்து சொகுசாக பயணிப்பார்..நின்று கொண்டு வரும் சக பிரயாணி. "இந்த பைய கொஞ்சம் வச்சிகங்க" என்று பல கிலோ எடையுள்ள சுமையை தொடையில் இறக்குவார் அடுத்த நண்பர். ஒரு வழியாக அந்த நெரிசலில் "எட்டணா அமுக்கி" நடத்துனரிடம் டிக்கெட் வாங்கியதும்தான் நிம்மதி வரும். முன்பெல்லாம் எட்டணா இல்லையென சொல்லும் நடத்துனர்கள், இப்போது அதையும் சொல்வதில்லை. நடத்துங்கள் நடத்துனர்களே. வயதில் பெரியவர்களை கூட ஏதோ அடிமைகளுடன் பேசுவது போல "அங்க போய் உக்காரு. சீக்கிரம் ஏறு, இறங்கு. உள்ள போ" என நடத்துனர்கள் ஏக வசனத்தில் பேசுவதை எப்போதுதான் நிறுத்தப் போகிறார்களோ?

மாநகர பேருந்துகளில், அரசு பள்ளி மாணவ மாணவிகள் சந்திக்கும் பிரச்னைகள் சொல்லி மாளாது. முதுகில் டன் கணக்கில் புத்தகங்களை சுமந்து கொண்டு கூட்டம் நிறைந்த பேருந்தில் அந்த பிள்ளைகள் ஏறினால்.. அவர்கள் மேல் ஏன் இப்படி எரிந்து விழுகிறார்கள் நம் மக்கள். 'பையை வச்சி இடிக்காத. நவுந்து நில்லு" என கடிந்து கொள்பவர்கள் வீட்டில் பிள்ளைகள் இருக்கிறதா.. இல்லையா தெரியவில்லை. நேற்று கூட தி. நகர் பேருந்து நிறுத்தத்தில் ஒரு காட்சி கண்டேன். அரசு பள்ளியில் பயிலும் ஒரு சிறுமி ஓட்டுனரிடம் 'அண்ணா, இந்த வண்டி பாரிமுனை போகுமா" என கேட்க அதற்கு அவர்.. மன்னிக்கவும் அவன் அந்த சிறுமியிடம் கடிந்து கொண்டு சொல்கிறான் "காலைலா சாப்டியா இல்லியா. கத்தி பேசு". பாவம் அந்த தங்கையின் முகம் சுருங்கிப்போனது. அரசு பள்ளி பிள்ளைகள் என்றால் அப்படி என்ன இளக்காரம் இவர்களுக்கு. அரசாங்கம் இப்பள்ளிகளில் பயிலும் சிறார்களுக்கு தனியாக பேருந்து விட்டால்தான் இந்த கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி. வறுமையின் நிறத்தை முகத்தில் அடர்த்தியாக பூசியபடி பள்ளிக்கு செல்லும் நம் பிள்ளைகள், இப்படி அவஸ்தை படுவதை சகிக்க முடியவில்லை.



இப்படிப்பட்ட மிருகங்களுக்கு மத்தியிலும் எங்காவது ஒரு நல்ல நடத்துனரோ, ஒட்டுனாரோ இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு நாள் பேருந்தில் நான் கண்ட காட்சி. பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்தின் படியில் பயணம் செய்து கொண்டு வந்தனர். அதை ஒரு பயணி காரமாக கண்டித்தார். உடனே அங்கு வந்த நடத்துனர், "பசங்கள திட்டாதீங்க சார். தன்மையா சொன்னா கேட்டுக்க போறாங்க. அவங்களுக்கு என்ன தெரியும். படிக்க சொன்னா படிப்பாங்க. வெளையாடுவாங்க. தம்பி மேல வாங்கப்பா" என அழைத்ததும் அவர்கள் அனைவரும் மேலே ஏறினர். முன் வரிசையில் அமரும் பள்ளி பிள்ளைகளிடம் அன்பாக பேசிக்கொண்டே வரும் ஓட்டுனர்களும் அரிதாக தென்படுவதுண்டு.


எதற்கெடுத்தாலும், பேருந்துகளில் தொங்கி கொண்டு வரும் இளைஞர்களை வசவு பாடும் மகாஜனங்களே, கூட்டம் அதிகம் உள்ள பேருந்துகளில் அவர்கள் வெளியே தொங்குவதால்தான் உள்ளே நீங்கள் மூச்சாவது விட முடிகிறது. அவர்களும் உள்ளே வந்து அடைத்துக்கொண்டு நின்றால் உங்கள் நிலை? பொம்பளைங்க மேல வந்து விழுகிறான் என்று புராணம் வாசிப்பீர்கள். எனக்கு தெரிந்து, இளைஞர்களை விட பெரும்பாலும் பெருசுகள்தான் பெண்களை உரசுகின்றன. தேவையான அளவிற்கு பேருந்துகளை இயக்கினால் அவன் ஏன் தொங்க போகிறான்.

நானும் ரொம்ப நாட்களாக பார்க்கிறேன், அது என்ன A/C பேருந்தில் செல்லும் சில குபேரர்கள், சாதாரண பேருந்தில் செல்லும் பயணிகளை சற்று அலட்சியமாக பார்ப்பது. அவர்கள் எல்லாம் பில் கேட்ஸ் பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் போல முகத்தை வைத்து கொள்வது ரொம்பதான் ஓவர். நம் மக்கள் பொதுவாக பல நிமிடம் ஒரு பேருந்தில் அமர்ந்து அது கிளம்பும் நேரத்தில், திடீரென மற்றொரு பேருந்து அருகில் வந்தால் உடனே அங்கே தாவுவதும், பிறகு அது கிளம்ப நேரம் ஆகும் என தெரிந்ததும், முதலில் அமர்ந்த வண்டிக்கே ஓடி வருவதும்... ஏக ரகளையாக இருக்கும். மனித மனம் ஒரு குரங்கு என்று சும்மாவா சொன்னார்கள்.

அப்படி என்னதான் இருக்கிறது இந்த ரங்கநாதன் தெருவில்.. உச்சி வெயிலில் கூட சென்னையின் பல பகுதிகள் இருந்து வந்து சரவணா ஸ்டோர்ஸ் பைகளுடன் தியாகராய நகர் பேருந்து நிறுத்தத்தில் குறுக்கும் மறுக்குமாக நடந்து கொண்டே இருக்கிறார்கள் நம் சனங்கள். தயவு செய்து சென்னை முழுதும் பல கிளைகளை சரவணா ஸ்டோர்ஸ் திறந்து வைத்தால், தி.நகர் சற்று இளைப்பாறும்.

சமீப காலமாக மாநகர பேருந்துகளில் பள்ளி மாணவர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. படியில் தொங்குதல், இளம் பெண்களை கிண்டல் செய்தல், இந்த வயதிலேயே மாமா, மச்சான் என பேசுதல் போன்றவை.... பேருந்தில் இவர்கள் செய்யும் அருவக்கதக்க செயல்கள் கல்லூரி மாணவர்களின் செயல்களையே மிஞ்சும் அளவிற்கு இருக்கின்றன. இன்றைய இளைய சமூகம் சரியான பாதையில்தான் பயணித்துக்கொண்டு இருக்கிறதா? பள்ளி நிர்வாகம்,அரசு மற்றும் பெற்றோர்கள் இதுபற்றி சிந்திப்பதே இல்லையா?


விஷம்போல் ஏறும் விலைவாசியில் ஏற்கனவே திண்டாடிக்கொண்டு இருக்கும் ஏழை, நடுத்தர மக்களின் உயிர்நாடியாக விளங்கும் பேருந்துகள் தாழ்தளம்,சொகுசு,சிறப்பு என பல ரூபங்களில் வந்தாலும் மக்கள் எதிர்பார்ப்பது, சாதாரண வசதியுடன், குறைந்த கட்டணத்தை வசூலிக்கும் பேருந்துகளைத்தான் என்பதே உண்மை. பேருந்தில் டிக்கெட் எடுக்கும் அனைத்து பயணிகளும் அமர வசதி செய்து தராமல், மூட்டை மூட்டையாக மக்களை உள்ளே அடைத்து செல்லும் செயல் எப்படி தர்மமாகும். சொகுசு பேருந்துகளிலும் இதே கதிதான். சென்னை போன்ற பெரு நகரங்களில் இது நடக்காத காரியம் என்பதெல்லாம் சரியான விவாதம் ஆகாது. இன்னும் எத்தனை வருடங்கள்தான் வயதானவர்களும், இளம் பெண்களும் இப்படி நின்று கொண்டே பயணிக்க முடியும். சென்னை நகர்வாழ் மக்களின் அடிப்படை தேவைகளில் இதுவும் ஒன்று என்பதை எப்படி மறுக்க முடியும். மொத்தத்தில் என் மனதில் பட்டதை இங்கு பதிவு செய்து இருக்கிறேன். உங்கள் பயணமும் நல்லபடி அமைய வாழ்த்துகள். மீண்டும் பயணிப்போம். நன்றி.

சுமைதாங்கி

பாதியில் தவிக்கவிட்டுச் சென்ற என் அப்பனுக்கோ! -அவரை
பறிமுதல் செய்த ஆண்டவனுக்கோ! - ஏன் தெரியவில்லை?
பாரம் சுமக்க நான் இன்னும் பக்குவப்படவில்லை என்று....