பிறந்தமண்!

பிறந்த ஊருக்குப்போய்ப்பாருங்கள்
அங்கு வீசும் காற்றும்
காதோரத்தில்
கதைபலபேசும்,
பெண்மனம் போல
ஒருக்கணம் நெகிழும்.

முனைமழுக்கிக்கொண்டு
குத்தாமல் பாதம்தொடவே
முட்களும் காத்திருக்கும்.

வீதிக்கோலங்கள் எல்லாம்நாளின்
பாதிப்போதிலேயே
பொலிவிழந்தாலும்
மீதிக்கோலத்திலும்
மகிழ்ச்சியாகவேமலர்ந்திருக்கும்

பூக்கள் எல்லாம் நமக்காகவே
புதிதாக மணம்வீசும்.

ஊரின் உதயத்தோடு
நம் இதயமும்
ஊரின் அஸ்தமனத்தோடு
அடிமனமும்
ஆனந்தக்கூத்தாடும்.

எதிரில் தெரியும்
எந்தமுகமும்
அறிமுகம் செய்து
நலம் விசாரிக்கும்.

தெருநாய்கூட
தெரிந்தாற்போல
வாலைக்குழைத்து
வாசலுக்கு வந்து நிற்கும்.

சாரிசாரியாய் செல்லும் எறும்புகள்
சின்னத்தீண்டலில்
'என்னநலமா?'
என்று விசாரிக்கும்.

பிறந்ததும் கிடந்த
தாயின் மடிபோல்
பிறந்தமண் ,பாதத்தில்
மெத்தென்றேதான்
பரந்திருக்கும்!

விடியபோகிறது ஈழம்...


விடியல்களின் வெளிச்சத்தில் விலாசம் தேடி
விரைந்து கொண்டேயிருக்கிறது
எங்கள் பயணம் !
இமைகளின் இடுக்கில்
இழைகிற சோம்பலில்
கருகப் பார்க்கிறது
எங்கள் கனவு !

இடர்கள் மிகுந்துவிட்ட இருட்டுப் பயணத்தில்
இன்னும் வளரத் துவங்கவில்லை
எங்கள் நம்பிக்கை ஒளி !

வெற்றியை நோக்கிய
வெறி கொண்ட ஓட்டத்தில்
இனி ஓயப்போவதில்லை
எங்கள் பாதங்கள்
உலகை மறந்துவிட்ட
உழைப்பின் உச்சத்தில்
சிதறத்தான் போகிறது
எங்கள் இலக்கு !

வியர்வையின் குளியலில்
முயற்சியின் முடியலில்
விடியத்தான் போகிறது
எங்கள் ஈழம் ..!

ஈழத்து வலி...


இரமேஸ்வரத்தில் எல்லோரும் குளித்து கரை ஏறுகிறார்கள்
நாங்கள் குதித்து கரை ஏறுகிறோம்
...

பிறந்த குழந்தைய்ன் நெற்றியில் வைக்கிறாள்
பிடி
மண்ணாய் கொண்டு வந்த தாய் மண்
...

கடல் கடந்து பார்க்க வந்ந்திருக்கின்றன

சோறு வைத்த காக்கைகள்
...

படகில் ஏறினோம் படகை விற்று
ஆழிப் பேரலைகளும் எங்கள் பெண்களை

வீடு புகுந்து இழுத்து போய் கொல்லத்தான்
செய்தன
ஆனாலும்
இலங்கை வானொலியில் இருந்து
நீங்கள்
பிறந்த நாள் வாழ்த்து கேட்கிறீர்கள்
நாங்கள் மரண அறிவித்தல் கேட்கிறோம்
...

முகாமிற்கு அருகில் உள்ள பள்ளியில் இருந்து கேட்கிறாது
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"

-
இப்படிக்கு வலிகளுடன் உங்கள் சொந்தங்கள்...

சிறகிருக்கு…வானமில்லை!


சிறகிருக்கு
வானமில்லை._ இதை
சிந்திக்க எவருக்கும்
ஞானமில்லை!

உயிரிருக்கு…
உறவில்லை._ இதை
உணரதான்
உலகில்லை!

பசியிருக்கு…
கஞ்சியில்ல…_ இந்த
பவத்த…
எங்கு சொல்ல!

சின்னக் கூடாரமே
எல்லையாட்சு._இங்கே
சிங்கள முள்வேலி
தொல்லையாட்சு!

சிறகிருக்கு…
வானமில்லை._இதை
சிந்திக்க எவருக்கும்
ஞானமில்லை!!

( மூச்சு விட அனுமதிக்கும் … முள்வேலிக்குள்… நம்முறவு.)

தருணங்கள்…


ஒரே தெருவில் வாழ்ந்த எங்களை
உலகெல்லாம்…
இறைத்து வைத்திருக்கிறது,
காலம்!.

எங்களின்,
சிறுவயது வாழ்க்கை…
சிரித்தப்படி… கதைத்தப்படி
அமையாது போக,
அப்பா, அம்மாவின்
கைவிரல் பிடித்து
கரையேறிவிட்டோம்…
ஏதும் அறியாது!

இன்று,
கைக்கு எட்டிவிட்ட
எந்த பிரமாண்டங்களிலும்
மனம் ஒப்ப மறுக்கிறது!

எங்கள் மண்ணில்
எங்களின் விடுதலைக் காற்றை
நுரையீரல் முழுதும் நிரப்பி
நுகரதான்… ஏங்குகிறது!

எங்கள்,
சிறுவயதுக்கு விலங்கிட்டு
உரிமை மறுத்த
அதே மண்ணில்,
எம் பிள்ளைகள் ஒன்றாய்
சிரித்தபடியும்…
கதைத்தபடியும்
செல்லுமந்த
செம்மார்ந்த தருணங்களை
என்வீட்டின் திண்ணையிலிருந்து
இறுமார்ந்து காண வேணும்
இதற்கான அமைவு வேணும்...

குண்டுச் செய்!


இன விடுதலைக்கெதிராய்
போராயுதங்கள் தந்த
புண்ணியவான்களே!

போர்முடிந்தது -அங்கே
பொழுது விடிந்ததா?

மண்ணையுண்டு காற்றைவிழுங்கி
மனிதன் வாழ வழியுண்டா?
எங்கள் துயரை எடுத்துரைக்க
எங்கேனும் மொழியுண்டா?

முள்வேலி நரகத்தில்
மூச்சு திணருது,
மூன்று லட்ச உயிர்களென
எந்த நாடு உணருது!!

ஓ…நாட்டாமை நாடுகளே!
இருக்கும் உயிரை…
காப்பாற்ற தொண்டுச்செய்!
இல்லயேல்…
எல்லா உயிருக்குமென
ஒரே ஒரு “குண்டுச் செய்”!

"தலைவர் என்று சொல்ல தகுதியற்ற நம் தலைவர்கள்"


நீதி"தேவதை" என்பதால்தானோ?
தங்கள் பெண்ணடிமை மனப்பாங்கை
அவளிடமும் கடைபிடிக்கிறார்கள்...
"
தலைவர் என்று சொல்ல தகுதியற்ற நம் தலைவர்கள்"

அகிம்சை

அகிம்சை வழியில்தான் போராட நினைக்கிறேன்.
கையில் கத்தியோடு...! "(தற்காப்பிற்காக)"

காதலின் ரகசியத்தை ரசமேடுத்து ரகசியமாய் எனக்களித்த என்னவளே...

காதலின் ரகசியத்தை
ரசமேடுத்து ரகசியமாய்
எனக்களித்த என்னவளே
யோகத்தின் சூத்திரத்தை
போகத்தின் பாத்திரத்தில்
தாரை வார்த்து தந்தவளே
வாதத்தின் வாளெடுத்து
வாழ்க்கையில் விளகேற்றி
வழிகாட்டி நின்றவளே
தாபத்தில் தோள் கொடுத்து
தடுமாறும் எனை தடுத்து
தாங்கியே வந்தவளே
மோகத்தில் மோத வைத்து
முகம் பார்த்து மனம் கோர்த்து - என்
மூர்கத்தில் தெளிந்தவளே
தியாகத்தில் தலைநிமிர்ந்து
சோகத்தை தனுள் ஈர்த்து
யாகத்தை வளர்த்தவளே
காமத்தில் கலை வளர்த்து
ஜாமத்தில் எனை வளைத்து
யாவும் தான் என்றவளே
என்னுளே வந்தவளே
எனையாள இன்பமடி
எந்நாளும் எந்நாளும்
விடியல் இல்லா இரவு
வடிகால் இல்லா உணர்வு
கனவான எந்தன் கனவு
நினைவுகளே அதன் வரவு
கண்ணிரே நிதம் செலவு
ஏக்கத்தின் மொத்த விளைவு
இன்பத்தின் இறுதி முடிவு
தனிமையின் தாளா தவிப்பு
துயரத்தின் விடைபெறா உறவு
களையிழந்த எந்தன் நினைவு
நிஜமாக்கும் உந்தன் பிரிவு
விழியால் வந்த சோகம்
அழியா நித்ய கோலம்
நினைவால் தினமும் யாகம்
புரியா இதய வேதம்
கனவால் என்றும் வாழும்
விடியா இரவு காலம்
இழையாய் தென்றல் விசும்
இனிய பழைய பாரம்
தினமும் தூது போகும்
நினைவின் மாய ஜாலம்
மனத்தால் ஏற்றும் திபம்
அணையா எனது தாபம்
உணர்வால் கலைந்த மேகம்
இடியாய் இடித்து மேலும்
மின்னல் துளைத்து பொழியும்
மழையாய் விழியை மீறும்
துடியாய் துடித்த இதயம்
அலையாய் அடித்து மடியும்
வெடியாய் வெடித்த பிரிவும்
விளங்கா நிஜத்தில் உழலும்
நிழலாய் கணமும் தொடரும்
வலியாய் அரிக்கும் நினைவும்
மலராய் விரிந்த போதும்
மணத்தை {மனதை} பறித்தாய் நீயும்
உயிரால் வாழ்ந்த போதும்
நிழலாய் வாழ்வும், சாவும்
இது தான் எந்தன் ராகம்
யார்தான் மீட்டக்{மீட்கக்} கூடும்

திருமண அழைப்பிதழ்...

சமீபத்தில் கவர்ந்த பாடல் வரிகள். அதனோடு பொருந்திப்போகும் அரசியல் நிகழ்வுகள்.... வரிகள் மாற்றியும், மாற்றப்படாமலும்....

ஜிந்தாக்கு ஜிந்தக் ஜிந்தக்
ஜிந்தாக்குதா

நான் ரொம்ப ரொம்ப ரொம்ப
நல்ல புள்ளை இல்லை
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம்
நான் செல்லப் புள்ளை இல்லை
சிபிஜ அன்புப் புள்ளை
கட்சியின் கவர்ச்சிப் புள்ளை
என்னோட பேரு இல்லா மீடியா நியூஸே இல்லை
ராசா ராசா நான் ஸ்பெக்டரம் ராசா
ராசா ராசா நான் ஸ்பெக்டரம் ராசா...
-------------------------------------------------------

என்னமோ
ஏதோ

எண்ணம் திரளுது கனவில்!
டெல்லி பிரளுது நினைவில்!
கண்கள் இருளுது நனவில்!
என்னமோ ஏதோ…
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
விட்டுப் பறக்குது தொலைவில்
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிபேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை..
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிபேழை
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை...
-------------------------------------------------------

யாரது யாரது
யாரது யார் யாரது
சொல்லாமல் நெஞ்சத்தைத் தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
யாரது யாரது
யாரது யார் யாரது
நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
விடையாகக் கேள்வி தந்தது
தெளிவாகக் குழம்ப வைத்தது
யாரது யாரது…
-------------------------------------------------------

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
மீன் கொத்தியப்போல் நீக்கொத்துரதால
அட கூட்டணி வெக்கத்தான் அழைப்பாய்களா
இல்ல, திராட்டுல வுட்டுத்தான் வதைப்பாய்ங்களா
தலைகாலுப் புரியாம தரைமேல நிக்காம
தடுமாறிப் போனேனே
நானே நானே!
யாத்தே யாத்தே யாத்தே...
-------------------------------------------------------

உங்கள் அன்புக்குரியவள் உங்களை சுற்றி வர ( 21+ )

கடவுள் எல்லாவற்றையும் கொடுத்தாலும் அவர் கொடுத்த ஆறாம் அறிவை ஒழுங்காக பயன்படுத்தாமையால் வருகிற வினைதான் சிக்கல்கள். ஒரு குடும்பத்தில் சிக்கல்கள் என்றால் அடிப்படையான காரணத்தை பார்த்தால் பிரதானமாக இருப்பது திருப்தியற்ற தாம்பத்திய உறவு தான். எனவே சுமூகமான செக்ஸ் நிச்சயம் ஒரு சந்தோசமான வாழ்க்கைக்கு உதவும். அதற்கு சிறந்த விழிப்புணர்வு அவசியம். அது தொடர்பான சில டிப்ஸ்.


1 )சுயநலகாரனாய் இருக்க வேண்டாம்
இந்த விடயத்தில் பெருன்பான்மையான சமயத்தில் ஆண்களின் ஆதிக்கமே கொடிகட்டி பறக்கிறது.அதாவது ஆண்கள் தான் எஜமானர்களாகவும் பெண்கள் அடிமைகளாகவும் உள்ளனர்.இது தவறு.ஆண் பெண் இருவரின் ஆதிக்கமும் சம அளவில் இருக்க வேண்டும். அதாவது ஆண் தனது இஷ்டத்துக்கு ஆட முடியாது.ஒவ்வொரு செயற்பாடும் இருவரின் மனம் ஒன்றியே நடக்க வேண்டும்.உதாரணமாக உடலுறவின் புதிய பரிமாணங் களை படைக்கிறேன் என்று கிளம்புபவர்கள் பலர் அதனால் தம் ஜோடி படும் துன்பங்களை அறிவதில்லை.எனவே ஆண் தனக்கு தோன்றும் விருப்பங்களை போல் தனது துணைக்கும் சில விருப்பங்கள் இருக்கும் என புரிந்து நிறைவேற்ற பழக வேண்டும்.

2 )புரிந்து கொள்ளுங்கள்
பெண்கள் மனதை அறிவது கடினம என்பார்கள். அதற்காக சும்மா விட முடியாது.குறிப்பாக இந்த விடயத்தில் அவர்களின் மனது உங்கள் சட்டை பையில் என்றால் நீங்கள் தான அவளது ஒரே ஒரு ஹீரோ. இதற்காக நீங்கள் இருவரும் திறந்த மனதுடன் இருக்க வேண்டும்.எந்த வெட்கமோ தயக்கமோ இருக்க கூடாது. நண்பர்களுடன் கதைப்பதை போல் இயல்பாக இருவரும் கதைப்பதின் மூலம் இருவரின் விருப்பு வெறுப்புக்கள் புரியப் பட்டு எந்த சிக்கலும் இல்லாமல் சுமூகமாக இருக்கும். நீங்கள் உங்கள் உங்கள் விருப்பங்களை திணிப்பதற்கு பதிலாக அவளின் விருப்பத்தை அறியுங்கள். அதே நேரம் உங்கள் விருப்பங்களின் தொடர்பான நிலைப்பாட்டையும் அறிய முயலுங்கள்.

3 )பச்சையாக கதைக்கலாம்
இது சற்று கடினமானது ஒன்று தான். நிங்கள் உங்கள் துணையுடன் மேற் கூறியவாறு இந்த விடயத்தில் ஒரு நல்ல புரிந்த்துனர்வை பேணுமிடத்து இது சுலபம். ஏனெனில் இப்படியான பேச்சுக்கள் இருவருக்கு நல்ல ஆரம்பத்தை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும். மேலும் இறுக்கமான மன நிலையில் இருந்தது ஒரு பார்க்கின்ற மனநிலைக்கு எடுத்து செல்லும். இது மேலும் உங்கள் துணையின் மனதை அறியவும் காட்டும் reactions இல் இருந்து அடுத்த கட்டத்துக்கு செல்வது தொடர்பாக நீங்கள் சிந்திக் கலாம். “I’d like to (blank) your beautiful (blank) while softly squeezing your (blank),”என்று சொலவதில் தவறில்லை. தமிழில் எழுதினால் மோசமாகி விடும் என்பதால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது.

4 )நல்ல சூழலை ஏற்படுத்துங்கள்
நிங்கள் தான் இதற்க்கு பொறுப்பு. எடுத்தோமா கவுத்தொமா என்று இல்லாமல் ஒரு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக சத்தம் இருக்க கூடாது.டிவி,ரேடியோ போன்றவற்றை நிறுத்தி விட வேண்டும். உங்களை ஒருவரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எவன் கதவை தட்டுவானோ, அல்லது நாங்கள் அபபடியிரிக்கிறோம் என்பதை கண்டு பிடித்து விடு வார்களோ என்று பயந்து கொண்டிருக்க வேண்டியது தான. இது தான் சில பெண்கள் தனிக்குடித்தனம் செல்ல விரும்பும் பிரதான காரணி. ஏனெனில் பெண்கள் மற்றவவர்கள் நம்மை கவனிப்பார்களோ என்று பயப்படுகின்றனர். அவர்கள் சுதந்திரமான சூழலையே விரும்புகின்றனர்.

5 )அவளை கடவுளின் வரமாக மதியுங்கள்
சிலர் பெண்களை எதோ செக்ஸ் இயந்திரம் போலவும் பெண்கள் இந்த உலகத்தில் இருப்பதே செக்ஸ் இக்கும் பிள்ளை பெறவும் தான என்று நினைக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் நிச்சயமாக சந்தோசமாக இருக்க முடியாது. முதலில் உங்கள் அனுபுக்குரியவளை கடவுள் உங்களுக்கு தந்த வரமாகவும் அவளூடாக தான் அவர் உங்களின் வாழ்கையை வசந்தமாக வைத்திருக்க போகிறார் என்பதை நீங்கள் புரிந்தது கொண்டாலே நீங்கள் அவளை கொண்டாட அவள் உங்களை கொண்டாடுவாள். எனவே அவளுடலை பாவித்து விட்டு எரியும் plastic tea cup போல நினைக்காமல் அதை உங்கள் மனதின் வடிவமாக பாருங்கள். பிறகு உங்கள் வாழ்வில் வசந்தம் மட்டும் தான்

ஸ்பெக்ட்ரம்!!! ஒரு சராசரி குடிமகன் பார்வையில்...

நண்பர்களே!!!

தேசிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம், அதில் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்படவேயில்லை என்றெல்லாம் மக்களே பேச ஆரம்பித்துவிட்டனர். ராஜா கைது தான் செய்யப்பட்டாரே தவிர குற்றம் நிரூபிக்கப்படவில்லை, அதுவரை நாங்கள் அவரை அரவணைத்துக் காப்போம் என்கிறார் முதல்வர். இது தினம் ஒரு அறிக்கை வரும் தேர்தல் நேரம்,மக்கள் சிந்திக்க வேண்டிய காலம், அப்படி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மெய்யாகவே நடந்தது என்ன ?!!! என்பதை துபாயில் பணிபுரியும் சிவக்குமார் என்னும் பொறியாளர் அருமையாக ஆய்வு செய்து எழுதியுள்ளார், இது இப்போது இமெயிலில் வரத்துவங்கிவிட்டது, இனியேனும் நன்கு படித்தவர்கள் அவசியம் சிரமம் பாராமல் சிந்தித்து வாக்களித்து நாட்டைக்காக்கவேண்டும். அவசியம் இதைப்படித்துவிட்டு ஃபேஸ்புக், ஆர்குட், ட்விட்டர் தளங்களில் ஃபார்வர்டும் செய்யவும்.

க்கள் அனைவரையும் இலவசங்களை மட்டுமே வாங்க தெரிந்த மாக்கான்கள் என்றே நினைத்து விட்டார் நம் முதல்வர். அதற்காகத்தான் தமிழ்நாட்டில் அனைவரும் குழந்தை பெற்றுகொள்கிறார்கள் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. என்னது ஏழைகள் பயன்படுத்தும் அளவிற்கு குறைந்த விலையில் சேவையை கொண்டுவந்தது ராசாவா? மக்களே உண்மையை புரிந்து கொள்ளுங்கள். இந்த புளுகு மூட்டைகளின் பாவத்திற்கு ஆளாகாதீர்கள். விலை குறைந்ததிற்கான காரணத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.

1999
ஆண்டில் தான் தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று வெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே. தொழில் நுட்பவளமான 1G அல்லது 2G அலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது. ஆனால் உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை கொடுத்து உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு அதிக கட்டணம்(In coming and out going ) வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தான் வசதி படைத்தவர்களாயிற்றே என்று இஷ்டத்திற்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரயம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.

நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. 2010 நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல்.

தற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளனர். ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது. தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட் அது மட்டும் இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை தொடங்க வேண்டும். இந்த குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும். டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு அந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

நியாயக் கணக்கு:

ந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது. எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY) பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம்.

ப்போது 15x0.40 =6.0 ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30x360 = 10,800 கோடிகள். ஒரு வருடத்திற்கு 12x10,800 = 1,29,600 கோடிகள். 2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ து குறைந்தபட்ச வருமானம் இன்றுவரை2,59,200 கோடிகள். இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம்.

தோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட்டணம்.......இன்னும் என்ன என்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் மற்றும் 15 நிமிடத்திற்கு அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவே முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது "INFINITIVE". நான் தற்போது இந்தியாவில் இல்லை. இருந்திருந்தால் அனைத்தையும் அலசி ஆராய்ந்து இதைவிட இன்னும் துல்லியமாக நடந்த ஊழலின் அளவை குறிப்பிட்டு இருப்பேன். இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும். கிடைத்ததா?

க்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு மக்களும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது. விலைவாசி உயரும். பொருளாதாரம் நாசாகும். "Above middle Class" மக்கள் நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் மேலும் பரம ஏழைகளாகவும் மாறுவார்கள்.

னநாயகம் வேரோடு அழியும். மனிதாபிமானம், மனிதநேயம் மண்ணோடு மண்ணாகும். ரௌடிசம்,குற்றசம்பவங்கள் தலைவிரித்து ஆடும். கடந்த ஐந்தாண்டுகளாக ஆயுள் கைதியாக உள்ள நடுநிலை பத்திரிகைகள் இனி மரண தண்டனை கைதிகளாக மாற்றப்பட்டு தூக்கில் போடப்படும்.

துரோகம்-1: உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும் அதிகம் பொறுமானம் உள்ள(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு வாங்க முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300 ,1650 கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டிய, மக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.

துரோகம்-2: பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவது பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களை சென்று அடைந்துள்ளது.

துரோகம்-3: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan, Unitech" போன்ற லெட்டர் பேட் நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்ற பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட் நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை.

இவைகள் சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு "S.TEL"

போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது.

துரோகம்-4: MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை ஒதுக்கி போதிய ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம் நிமிடத்திற்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன் அடைந்து இருப்பார்கள்.


துரோகம்-5: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது பங்குகளை பல வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும் பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தல்.

துரோகம்-6: நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG ,தொலைதொடர்பு சம்பந்தபட்ட, கைபற்றபட்ட ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்பு, சட்ட,நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு இப்படி கோடி கணக்கில் ஆதாரங்கள், சாட்சிகள். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில்லை. அதிலும் முறைகேடு.

துரோகம்-7: இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை ஒப்பு கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G யில் ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள் என்ற ஆணவ நினைப்பு.


துரோகம்-8: நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.

துரோகம்-9: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால் ஏராளமான அரசு கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி,வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை கண்டிருக்கலாம்.

துரோகம்-10: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற இனத்தை சேர்ந்த ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்து. ஒரு முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு இதை விட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இதுதான் ஊழலின் விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி. நம்மிடம் உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டும் இல்லை அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும் நமது ரத்தத்தில் விட்டு செல்கின்றனர்.

ப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது. இந்த ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுத்தி சுத்தி அடிக்கும். எப்படி? ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு அதை பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது.

ரு ஏக்கரை குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை. இதுதான் ஊழலின் விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்று. இது மட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான் செய்கின்றனர்.

வர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல. அனைத்தும் மிக மிக செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை மூடி மறைக்கும் செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள். இந்த ஏழை, பணக்காரன் இடை வெளியை குறைக்கத்தான் அரசாங்கம் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள். சொல்லபோனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின் செல்கின்றனர். இலவசம் வாங்கும் மக்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.

ங்கள் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இலவசம் கொடுக்க தேவையான வரிபணத்தை செலுத்தும் உழைக்கும் மக்களின் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இது நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது. இலவசம் மாறவில்லை என்றால் உங்கள் வாழ்கை தரமும் மாறபோவதில்லை.

னது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள் என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான். எனவே தெரிந்துகொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் தெரியபடுத்துங்கள். ரோட்டில் இறங்கிதான் போராடவேண்டும் என்று இல்லை.கொடி பிடிக்க அவசியமும் இல்லை. e -mail, FAX , Facebook , orkut என்று எவ்வளவோ தொழில் நுட்ப வசதி உள்ளது. தங்களுக்கு உகந்த ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்காத வகையில் சுலபமாக இதை செய்யமுடியும். செய்வீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.

காதலர்தின சிறப்பு ராசிபலன்கள்...

மேஷம் Aries

இன்னும் யாரையும் காதலிக்கவே ஆரம்பிக்கவில்லையா? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி; விரைவில் உங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள ஒருவர் வரப்போகிறார்.

ஏற்கனவே காதலித்துக்கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு இனிமேல் சோதனைதான்! விரைவில் இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப்போகிறீர்கள்.

ரிஷபம் Taurus

இந்த ராசிக்காரக் காதலர்களுக்கு விரைவில் ஒரு பெரிய கோஷ்டியுடன் எங்காவது ஒரு பார்க்கிலோ, பீச்சிலோ நிறைய காஸ்ட்யூம்களை மாற்றிக்கொண்டு டூயட் பாட ஒரு வாய்ப்புக் கிடைக்கப்போகிறது. உங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர்களின் பாடல்களில் ஒன்றை மனப்பாடம் செய்து கொள்வது நலம் பயக்கும்! குத்துப்பாட்டெல்லாம் நல்லா டான்ஸ் ஆடத்தெரிஞ்சவங்களுக்கு மட்டும்தான்! பல ரோடுகள் சேதமடைந்திருப்பதால், கல்லுக்கு எங்கும் பஞ்சமில்லை.

இதுவரை காதலிக்காதவர்களுக்கு! சுக்கிரனின் பார்வை இப்போது உங்கள் மீது விழுந்திருப்பதால், விரைவில் டவுண் பஸ், ஷேர்-ஆட்டோ, ரயில் பயணங்களின்போதோ, ஸ்பென்ஸர்ஸ், அண்ணா நகர், திருவான்மியூர் போன்ற சிக்னல்களிலோ உங்களது எதிர்காலத் துணையை சந்திக்கிற வாய்ப்பு ஏற்படப்போகிறது. (கவனம்: ஐயா, சாமீ தர்மம் பண்ணுங்க என்று வருகிறவர்கள் இதில் அடங்கமாட்டார்கள்!)

மிதுனம் Gemini

’காதலாவது கத்திரிக்காயாவது,’ என்று மார்னிங் ஷோ சினிமா பார்த்தோமா, சரவணபவனில் மினிமீல்ஸ் சாப்பிட்டோமா, ஒன்-ட்வென்ட்டி பான் மென்றோமா என்று இருந்த உங்களுக்கு சனிதசை தொடங்கியிருப்பதால், விரைவில் காதல்வயப்பட்டு கவிழ்த்துப்போட்ட கரப்பான்பூச்சி மாதிரி கஷ்டப்படப் போகிறீர்கள். உங்கள் தசாபலன்களின்படி இந்த கண்டத்திலிருந்து தப்பிப்பது கடினம் என்றாலும், சில நாட்களுக்கு கைபேசி,கணினி போன்ற அனுகூலசத்ருக்களிடமிருந்து விலகியிருந்தால், சனியின் உக்கிரம் சற்றுக் குறைய வாய்ப்பிருக்கிறது; அதாவது பாதிப்பு சற்று தாமதிக்கலாம்.

ஒரேயடியாக மீள்வதற்கு வழியில்லையா என்று கேட்பவர்களுக்கு: ’உடனே திருமணம் செய்து கொண்டு விடுவோம்,’ என்று சொன்னால் மலைபோல வரும் துன்பம் பனிபோல போக வாய்ப்பிருக்கிறது.

கடகம் Cancer

சும்மா சொல்லக்கூடாது. உங்க ராசிப்படி உங்கள் வாழ்க்கைத்துணையை உங்க வீட்டிலேயே பார்த்து முடிவு பண்ணி விடுவார்கள் என்பதால் நிறைய அலைச்சல், செலவு, உளைச்சல் மிச்சமாகும். அதற்கெல்லாம் சேர்த்துவைத்து திருமணத்திற்குப் பிறகு மூன்றும் சேர்ந்து மும்முனைத் தாக்குதல் நடத்தும்.

சிம்மம் Leo

இந்த ராசிக்காரர்கள் எல்லா கிரெடிட் கார்டு பாக்கியையும் விரைவில் அடைத்து விடுவார்கள் என்பதால், புதுக்கார்டுகள், புதுக்கடன், புதுக்காதல் எல்லாம் கைகூடுகிற வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. சூட்டோடு சூடாக, கடன் தலைக்கு மேல் மீண்டும் போவதற்கு முன்னர், திருமணத்தை முடித்துக்கொள்வது உசிதம்.

கன்னி Virgo

’தெரியாத்தனமாகக் காதலித்துத் தொலைத்துவிட்டோமே, இதெல்லாம் நமக்குத் தேவையா என்று தலையில் மடேர் மடேர் என்று அடித்துக்கொண்டிருப்பவர்கள் இந்த ராசிக்காரர்கள். இவ்வளவு நாட்கள் இடைவிடாத சண்டையும் சச்சரவுமாக காதலித்துவிட்டதால், போனால் போகிறது என்று இனி திருமணம் செய்து கொண்டு விடலாம். இன்னும் காதலிக்கவே ஆரம்பிக்காதவர்களுக்கு பூர்வஜென்ம தொடர்புகள் ஏற்படுகிற வாய்ப்புகள் இருப்பதால், மலைப்பிரதேசங்களுக்குப் போக வேண்டிய பல வாய்ப்புகள் ஏற்படலாம். (கு..றிஞ்சி மலர் மலையில் தானே பூக்கும்!)

துலாம் Libra

இந்த ராசிக்காரர்கள் அனேகமாக அவரவர் பட்ஜெட்டுக்குத் தகுந்தவாறு மண்டபத்தைத் தேடிக்கொண்டிருப்பார்கள் என்பது உறுதி. விரைவில் டும்டும் கொட்டப்போகிறது என்பதால், ப்ரிவிலேஜ் லீவ், லோன் ஆகியவற்றிற்கான ஊத்தப்பங்களை, மன்னிக்கவும், விண்ணப்பங்களை தயார் செய்து கொள்ளவும். தன்னந்தனியாக இருப்பவர்களே! திரும்பிப் பாருங்கள் - வில்லங்கம் விரைவு வண்டியிலே வந்திட்டிருக்கு!

விருச்சிகம் Scorpio

இதுவரைக்கும் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட காப்பாற்றாத காதலர்கள் இனிமேல் புதிய வாக்குறுதிகளை அளித்து விடுவார்கள். காதலுக்கு தைரியமும் திராணியும் மிக அவசியம். எனவே, யாரையாவது பார்த்து காதல் வந்தால், தைரியமாகச் சொல்லிவிடுங்கள். பிரச்சினை வந்தால், இருக்கவே இருக்கிறது திராணி! திரும்பிப் பார்க்காமல் ஓடி விடுங்கள்!

தனுசு Sagittarius

இதுவரை சதா சண்டை,சச்சரவு,கோபம் என்றிருந்த காதலர்களுக்கு, இனிமேல் அதுவே பழகிப்போய் விடும். ஆகையால் இனிமேல் ஒருநாள் சண்டை போடாவிட்டாலும், மனம் பதைபதைத்து "உடம்புக்கு ஒண்ணுமில்லையே?" என்று அக்கறையோடு விசாரிப்பீர்கள்.

உங்களது கனவுக்கன்னி அல்லது கனவுக்காதலன் எப்படியிருக்க வேண்டும் என்று கற்பனை செய்பவர்கள், மறந்து விடுவதற்கு முன்னர் எழுதிவைத்துக்கொண்டு தேடுதல் நன்மை பயக்கும்.

மகரம் Capricorn

பன்னிரெண்டு ராசிகளிலும் காதலர்களுக்கு மிகவும் மோதகமான, அதாவது சாதகமான ராசி இது தான். உங்கள் காதலைப் பற்றி வீட்டில் யாராவது போட்டுக்கொடுத்து விடுவார்கள் என்பதால் இனிமேல் பயமின்றி சந்திக்கலாம். இதுவரை காதலிக்காதவர்களிடம் யாராவது வந்து அசடுவழிந்து அகமகிழச்செய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

கும்பம் Aquarius

இந்த ராசிக்காரக் காதலர்கள் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு ரகம். ஒன்று தங்களுக்குள்ளே ஏற்பட்ட மனக்கசப்புகளையெல்லாம் ஒரு மசால்தோசை சாப்பிட்டுவிட்டு மறந்துவிடுவார்கள். இல்லாவிட்டால், ஆளுக்கு ஒரு கப் அருகம்புல் ஜூஸ் குடித்துவிட்டு ஆளை விடு சாமீ என்று போய்விடுவார்கள். இதுவரை காதலிக்காதவர்கள், எப்போது சினிமாவுக்குப் போனாலும் ஒரு எக்ஸ்ட்ரா டிக்கெட் எடுப்பது நல்லது. குருட்டாம்போக்கில் ஜோடி சேர்ந்தாலும் சேரும்.

மீனம் Pisces

இந்த ராசிக்காரர்களிடம் கோடம்பாக்கம் போக வழிகேட்டால், பதில் சொல்வதற்குள்ளாக நீங்கள் கோயம்புத்தூருக்கே போய்வந்து விடலாம். ஆனால், திடீரென்று லெட்டர்-பேட் கட்சிகள் தேர்தல் நேரத்தில் அடைவது போன்ற சுறுசுறுப்பை இவர்கள் அடையவும் வாய்ப்பிருக்கிறது. எனவே காதலில் ஒரு லிரில் புத்துணர்ச்சி ஏற்பட்டாலும் ஏற்படும். புதிதாகக் காதலிக்க விரும்புகிறவர்கள் யுவன் சங்கர் ராஜா பாடல்களை தினமும் குளித்துவிட்டுப் பாராயணம் செய்தால் கைமேல் பலன் கிடைக்கும்.

அனைத்து ராசிக்காரர்களுக்கும்:

ராசியான நிறம்: சிவப்பு
ராசியான உடை: முக்காடு
ராசியான எண்கள்: 'பிஸி’ யாக இல்லாத எல்லா எண்களும்.

தமிழ்நாடு எனும் மாநிலம் சிறக்கும்...


ஸ்டாலின் எனும் பிள்ளை ஜெய்த்து
அழகிரி எனும் அகராதி தொலைந்தால்தான்
தமிழ்நாடு எனும் மாநிலம் சிறக்கும்...
-கலைஞர் கருணாநிதி

கலைஞர் கருணாநிதி குடும்பம்


"நாடு என்று சொன்னால் உதடுகள் கூட ஒட்டாது"
"என் குடும்பம் என்று சொன்னால்தான் உதடுகள் கூட ஒட்டுகிறது"
-கலைஞர் கருணாநிதி

கருணாநிதி மற்றும் அறிஞர் அண்ணாவின் நிஜ முகங்கள்...

ஒரு நாளுக்கு முன்னாடிதான் கவிஞர் கண்ணதாசனின் சுயவரலாறான “வனவாசம்” புத்தகத்தைப் படித்து முடித்தேன். அதில் கண்ணதாசன் கருணாநிதியின் குள்ளநரிதனத்தை அப்போதே தோலுறித்து காட்டியுள்ளார். அதை விட இது நாள் வரை பண்பாளர், பக்குவமான அரசியல்வாதி என்று நான் படித்து வந்த அண்ணாத்துரையின் நிஜ முகத்தையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். ஆனால் இந்த உண்மைகளை பற்றியெல்லாம் தற்கால பத்திரிகைகள் எதுவும் எழுதுவதில்லை. அதனால், நான் உட்பட இன்றைய தலைமுறையினருக்கு திராவிட தலைவர்களின் உண்மையான உருவங்கள் தெரியவில்லை. கருணாநிதியும் அண்ணாவும் எப்படி குள்ளநரி தந்திரம் செய்து நேர்மையான திராவிட தலைவர்களையும் பிரமுகர்களையும் கீழே தள்ளிவிட்டு தாங்கள் மட்டும் பதவி ஏணியில் ஏறினார்கள் என்பதை அருமையாகயும் நாசுக்காகவும் விளக்கியுள்ளார் கண்ணதாசன்.

கண்ணதாசன் எழுதியவற்றை அப்படியே இங்கு கறுப்பு எழுத்துக்களில் கொடுத்துள்ளேன். எனது கருத்துக்களை நீள எழுத்துக்களில் எழுதியுள்ளேன். கண்ணதாசன் “வனவாசத்தில்” தன்னை ‘அவன்’ என்றே கூறிப்பிட்டுள்ளார். அவர் கருணாநிதியைப் பற்றி எழுதிய விமர்ச்சனங்களை படிப்பதற்கு முன்பு அவர்கள் இருவரும் ஆரம்பத்தில் எவ்வாறு நட்பாக இருந்தார்கள் என்பதை கீழே காணுங்கள். அதன் மூலம் அவர் ஏதோ காழ்ப்புணர்ச்சியால் கருணாநிதியைப் பற்றி எழுதவில்லை என்பதனை நாம் புரிந்து கொள்ளலாம்.

கருணாநிதியுடனான நட்பு

கண்ணதாசன் எழுதிகிறார்….

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் இருக்கும்போதுதான் நடிகர் எம்.ஜி. சக்கரபாணியின் தொடர்பு அவனுக்கு கிடைத்தது. அவர்தான் கருணாநிதி என்கிற பெயரை முதலில் அவனுக்கு அறிமுகப்படுத்தினார். கருணாநிதியின் வசனங்களைப் பற்றி, அவனிடம் அடிக்கடி சொல்லுவார். ஒருநாள் சேலம் அம்பிகா தியேட்டருக்கு, அவனும் சக்கரபாணியும் ‘அபிமன்யு’ படம் பார்க்கப் போனார்கள். அந்தப் படத்தின் வசனங்களைக் கருணாநிதி எழுதியதாகச் சக்கரபாணி சொன்னார்.

அந்த வசனங்கள் இன்றுவரை அவனது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு நாளல்ல… ஆறு நாட்கள் சேர்ந்தாற்போல அந்தப் படத்தை அவன் பார்த்தான். “காணாமல் காதல்” என்பார்கள். அந்தக் ‘காதலே’ பிறந்துவிட்டது அவனுக்குக் கருணாநிதியின் மீது…! “மாடர்ன் தியேட்டர்ஸுக்கு அவரை வரவழைக்க வேண்டுமென்று, சக்கரபாணியிடம் சொன்னான்.

அன்று கருணாநிதியை அவன் முதன்முதலாகக் “கோயம்புத்தூர் லாட்ஜில்” சந்தித்ததும், ஒரு காதலியைக் காணும் உணர்ச்சியே அவனுக்கு ஏற்பட்டது. அன்று முதல் கருணாநிதியும் அவனை உயிருக்குயிராக நேசிக்கத் துவங்கினார். ‘மாடர்ன் தியேட்டர்ஸில்’ மாதம் ஐந்நூறு ரூபாய் சம்பளத்தில் அவர் வேலைக்கமர்ந்தார்.

ஒரு நாளாவது ஒருவரை ஒருவர் காணாமலிருந்தால் எதையோ பறிகொடுத்தது போலிருக்கும். ஒருவர் கையில் இன்னொருவர் தலை வைத்துத் தூங்குகிற அளவுக்குப் பாசம் வளர்ந்தது. அவரைப் பற்றி யாராவது தவறாகப் பேசிவிட்டால், அவனால் பொறுக்க முடியாது. அவருக்கும் அப்படியே.

பார்த்தீர்களா, இருவரும் எவ்வாறு ஆரம்பத்தில் நட்பாக இருந்துள்ளார்கள் என்று. தவிர கவிஞர் அக்கால கட்டத்தில் அண்ணாவின்பால் மிகவும் ஈர்க்கப்பட்டார். அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டார். அதனாலேயே கடவுள் பக்தியை விட்டார், சுயமரியாதை கொள்கைகளை ஏற்றார். தொடர்ந்து திராவிட இயக்க தலைவர்கள் இரவு நேர சாகசங்களை படியுங்கள். எச்சரிக்கை, மனதை திடப்படுத்திக் கொண்டு படியுங்கள்.

கருணாநிதி மற்றும் அண்ணாவின் இரவு நேர சாகசங்கள்

கவிஞரே! நீங்கள் தொடருங்கள்,

அந்நாளில் திராவிட முன்னேற்றக் கழகம் பிரபல இயக்கமாக இல்லை.வாடகைக் கார் டிரைவர்களுக்கும், அந்தக் கழகத்தைப் பற்றியோ, அதன் தலைவர்களைப் பற்றியோ எதுவும் தெரியாது. அவனும் தலைவனும் ஓர் நாள் இரவு, ஒரு பெரிய வாடகைக் காரை வைத்துக்கொண்டு பெண் வேட்டையில் ஈடுப்பட்டார்கள்.

ஒரு நாலைந்து பெண்கள் – கிராமத்துப் பெண்கள் – வேறு பெயரில் சொல்வதானால் நாட்டுக்கட்டைகள், மடமடவென்று வந்து காருக்குள் ஏறிக்கொண்டார்கள். காமுகன் பசிக்கு ருசியா தெரியும்? அத்தனையையும் ஏற்றிக்கொண்ட வாடகைக் கார், நேரே சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கம் உள்ள ஹோட்டலை நோக்கிப் புறப்பட்டது.

திராவிட விடுதலை வீரர்கள் திராவிட நாடு அந்தப் பெண்களிடம் இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தார்கள். காமக்கடலில் மூழ்கி எழுந்தார்கள். ஆனால் காரில் போவதற்குக்கூட பணம் கொடுக்காமல், அவர்களை வெளியே அனுப்பிவிட்டார்கள்.

அன்றும் அதற்குப் பிறகும், நடைபெற்ற களியாட்டங்களை, ஒவ்வொன்றாக விவரிக்கத் தேவை இல்லை. அது சுவைக்குறைவாகவும் போய்விடக்கூடும்.

ஆனால் சில பெண்கள், அவ்வப்போது நறுக்குத் தெறித்தாற்போல் கேட்ட கேள்விகளை அவனால் மறக்க முடியவில்லை.

“மேடையில் என்னென்னவோ பேசுகிறீர்கள்! அதெல்லாம் ஊருக்குத்தான் உபதேசமா?”

“நீங்களே இப்படி நடப்பதைப் பார்த்தால், யாரை நம்புவதென்றே தெரியவில்லை.”

“உங்கள் கையில் நாடு கிடைத்தால் – சட்டசபையெல்லாம் பெண்களாகவே இருப்பார்கள்.”

இப்படி ஆணித்தரமான பொன்மொழிகள் பலவற்றை அவர்கள் சந்தித்த பெண்கள் உதிர்த்திருந்தார்கள்.

திராவிட முன்னேற்றக் கழக்கத்தின் தலைவர்கள் பலரும், ஒழுக்கமற்றவர்களென்றும் காமுகர்களென்றும் எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தும்போது அவனுக்குக் கொஞ்சம்கூட கோபம் வருவதில்லை!

காரணம் – அதுதான் உண்மை! அரசியலையே அவர்கள் வேடிக்கையாகத்தான் நடத்தினார்கள். கட்சியினுடைய ஆரம்ப காலமான அக்காலத்திலும் ஒரு தலைவர் இன்னொரு தலைவரைக் கேலி செய்வதே வாடிக்கையாக இருந்தது! “நீ இப்படி செய்யலாமா?” என்று ஒருவரைக் கேட்டால், “ஏன் அவர் மட்டும் என்ன யோக்கியராம்?” என்று” பளிச் சென்று பதில் சொல்வார்கள்.

பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்கின்ற தொண்டர்கள் அன்றும் சரி, இன்னும் சரி, அவ்வளவு உத்தம்மானவர்கள். அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்குப் பரிதாபமாக இருக்கும். “இந்தத் தலைவர்களை நம்பியா நீங்கள் இந்த வேலையில் ஈடுபட்டிருக்கிறீர்கள்!” என்று கேட்கத் தோன்றும். தவறுகளையே செய்து கொண்டிருக்கும் தலைவர்கள், அந்த உத்தமமான தொண்டர்களை மிரட்டுவார்கள்.

உள்ளூரிலேயே ‘ஐம்பது ரூபாய் கொடுத்தால்தான் கூட்டத்திற்கு வருவேன்’ என்பார்கள். வாடகைக் காருக்குப் பணம் கொடுக்கும்படி மிரட்டுவார்கள். தன் மனைவியின் தாலிச்சரட்டை விற்றுவிட்டு, தலைவரின் வழிச்செலவுக்குப் பணம் கொடுத்த ஒரு தொண்டனை அவன் அறிவான். ஈட்டிக்காரனிடம் எழுதிக் கொடுத்துக் கடன் வாங்கி ஒரு கூட்டத்தை நடத்தினான் ஒரு தோழன். அந்தக் கூட்டத்தில் பேசுவதாக இருந்த ஒரு பேச்சாளர் பணத்தையும் வாங்கிக்கொண்டு
வெளியூருக்குப் போய்விட்டார்.

கூட்டத்திற்கு அவர் வராததால் ஏமாந்த அந்தத் தோழன் ‘கோ’வென்று அலறி அழுது கொடிகளையெல்லாம் பிய்த்துக் கீழே போட்டான். ஜனநாயகத்தின் போலித்தனம் அவனுக்குத் தெரியலாயிற்று.

அவனுடைய நண்பர் (வேறு யார் கருணாநிதி தான்) சரியான அரசியல்வாதி! தமிழ் நாட்டில் பிச்சைக்காரர்கள் இருப்பதுபற்றி அற்புதமான வசனங்கள் எழுதுவார். ஆனால் ஒரு பிச்சைக்காரனுக்குக்கூட கையைவிட்டுக் காலணாக் கொடுத்ததில்லை.

தொழிலாளர்களையும், அவர்கள் ரத்தம், நரம்புகளையும் பற்றித் துள்ளும் தமிழில் கட்டுரைகள் தீட்டுவார். அவரிடம் ஊழியம் பார்ப்பவர்களுக்கு மிகக் குறைந்த அளவு சம்பளமே கொடுப்பார்.

தான் முன்னேறுவதுபோல் இன்னொருவனும் முன்னேறி விடாமல் இருக்க சகலவிதமான வழிகளையும் கையாளுவார். ஏன், வயிற்றுப்பாட்டுக்காக விபச்சாரத் தொழில் புரிந்து கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் பணத்தைக் கொடுத்துக் காரியமும் முடிந்தபின், சத்தம் போட்டு அந்தப் பணத்தையே திருப்பி வாங்கி வந்தவர் அவர்.

சென்னை ராயப்பேட்டையின் குறுகலான சந்து. அந்தச் சந்திலேதான் அந்தப் பெண்ணின் தகப்பனாரான நாட்டு வைத்தியர், தன் மூன்று பெண் மக்களோடு குடியிருந்தார். மூத்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. மற்றும் இருவர் கன்னியர். அவனும் அந்தத் ‘துள்ளுத்தமிழ்த் தோழனும்’ இன்னும் ஒரு தற்கால எம்.எல்.ஏ.யும் இரவு 9 மணிக்கு அந்த வீட்டில் நுழைந்தார்கள்.

மூவருக்குமாக ரூபாய் நூற்றைம்பது தரப்பட்டது. இளைய பெண்ணொருத்தியை அந்தப் பிரமுகர் சேர்த்துக் கொண்டார். அந்தச் சிறிய வீடு, மறைவு தட்டிகளால் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. இரவு பதினொரு மணி இருக்கும். ஒரு பகுதியிலிருந்து பரபரப்பஅன பேச்சுக்குரல் எழுந்தது. நேரம் ஆக ஆக, அது வாக்குவாதமாக வளர்ந்தது. ‘கலாரசிகர்’ வெளியிலே வந்தார். கையிலிருந்த துண்டைத் தலையிலே கட்டிக்கொண்டார். நாட்டு வைத்தியிரைத் தட்டி எழுப்பினார்.

“உன் பெண் சரியாக நடந்துகொள்ளவில்லை. மரியாதையாகப் பணத்தைத் திருப்பிக்கொடு” என்றார். “போலீசைக் கூப்பிடுவேன்” என்று மிரட்டினார். போலீஸ் வந்தால் தன் கதி என்ன என்பதை அந்தக் கலாரசிகர் மறந்தே போனார். இறுதியில் ரூபாய் நூற்றைம்பதையும் பெற்றுக்கொண்டு தான் ஆளை விட்டார். பின், ஒரு வாரம்வரை அதை ஒரு வெற்றி விழாவாகவே அவர் கொண்டாடினார். அந்த ரூபாயும் அன்று மிஞ்சியதுதானே தவிர, அடுத்து அதே மாதிரிக் காரியத்திற்குத்தான் பயன்பட்டதது.

விடுதலை இயக்கத்தின் பிரமுகர்களைக் கவனியுங்கள். எப்படியோ அப்பாவிப் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட்ட அரசியல்வாதிகளின் யோக்கியதையைக் கவனியுங்கள். சமுதாயத்தின் இருண்ட பகுதியை ஒளிமயமாக்கப் புறப்பட்ட அவர்கள், பொழுது இருண்டபிறகுதான் தங்கள் வாழ்க்கையைத் தொடங்குவார்கள்.

எந்தெந்தத் துயரங்களிலே இந்தச் சமுதாயம் ஆழ்ந்து கிடக்கிறதென்று அவர்கள் புலம்புவார்களோ, அந்தத் துயரங்கள் பலவற்றிற்கு அவர்களே தான் காரணம் ஆனார்கள்.

அந்த நேரத்தில் அவன் அவர்களைப்பற்றி அதிகம் ஆராய விரும்பவில்லை. காரணம் அவனும் உடன்பட்டேதான் அந்தக் காரியங்களில் இறங்கினான். பணக்கார மைனர்களைப் போன்று, பகலிரவு பாராமல் அவர்கள் ஆடினார்கள்.

இந்த நேரத்தில் அவனுக்குச் சில செய்திகள் தரப்பட்டன. நாம் மட்டும் தவறு செய்யவில்லை! முக்கியத் தலைவரே (யாரென்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்) அதைத்தான் செய்கிறார் – என்று அந்தச் செய்திகள் கூறின! கலாரசிகரும், இன்றைய எம்.எல்.ஏ. ஒருவரும், அந்த நிகழ்ச்சியினை அவனுக்கு விரிவாகவே கூறினார்கள். அந்த எம்.எல்.ஏ. முக்கியத் தலைவரின் பத்திரிக்கையிலே வேலை பார்த்தவர். ஆதலின், அவர் சொன்னவற்றை அவன் நம்பினான். அது இது:

ஓர் இரவு, முக்கியத் தலைவர் தூக்கம் பிடிக்காமல் முன்னும் பின்னும் நடக்கிறார். வெளியிலே இருவர் போயிருக்கிறார்கள். அவர்களை அவர் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார். மணி பத்தடிக்கிற்அது. பதினொன்று! கோயிலில் அர்த்த ஜாம மணி அடிக்கிறது. மணி பனிரெண்டு! அதற்குள் தலைவர் ஏழெட்டுத் தடவை வெற்றிலை போட்டுத் துப்பிவிட்டார். அதோ அவர்கள் வரும் சத்தம் கேட்கிறது.

கதவு திறக்கப்படுகிறது. மூன்று ஆடவர்கள் உள்ளே நுழைகிறார்கள். “ஆடவர்கள்தானா? அழகு மயில் வரவில்லையா!” ஓர் ஆடவனின் தலைக்கட்டு அவைழ்க்கப்படுகிறது. ஆண் உடைகள் களையப் பெறுகின்றன. என்ன ஆச்சரியம்! அந்த உடைக்குள் ஓர் அழகிய மயிலல்லவஅ ஒளிந்து கொண்டிருக்கிறது. அழைத்து வந்தோர் குறிப்பறிந்து வெளியேறுகிறார்கள். பகுத்தறிவுத் தலைவரின் அறை பண்டாரச் சன்னியின் மடமாகிறது. பொழுது விடிவதற்குமுன்னே பூவை திரும்புகிறாள்.

இந்த நிகழ்ச்சியைப்பற்றி அறிந்த கட்சிப் பிரமுகர்கள் இதற்குக் கொடுத்த பெயரென்ன தெரியுமா? ‘சுந்தரகோஷ்’ என்பதாகும். ‘வேலைக்காரி’ படத்தில் ஆண்வேடம் தாங்கிய பெண்ணொருத்தி ‘சுந்தரகோஷ்’ என்று அழைக்கப்படுவதையே அவர்கள் அப்படிக் குறிப்பிட்டார்கள்.

போலி சீர்திருத்தவாதிகள்

அந்த அரசியலிலேயே அவன் ஊர்ந்து சென்றாலும் சில விசயங்களில் அவன் எச்சரிக்கையாக இருந்தான். கழகதிற்கென்றே ஒரு தனித்தமிழ் நடை உண்டு. அண்ணாத்துரையின் நடையைப் பின்பற்றி, எல்லோருமே ஒரே மாதிர் ‘துள்ளு தமிழ்’ எழுதுவார்கள். எழுதியவரின் பெயரை எடுத்துவிட்டுப் பார்த்தால் யார் எழுதியதென்றே தெரியாது. கதை ஒன்றில் தொடங்கி, பிறகு அதைக் கட்டுரையாக விரிக்கும் அலுத்துப்போன முறையை அனைவருமே கையாண்டார்கள்.

அவற்றில் எதையும் அவன் படிப்பதில்லை. காரணம், அந்த நோய் தன்னையும் பற்றிக்கொள்ளக்கூடாது என்பதுதான். தன்னுடைய எழுத்துக்களை அவன் படிப்பதில்லை என்பதிலே அவனுடைய நண்பர் கருணாநிதிக்கு அசாத்தியக் கோபம் வரும். ஒருநாள் அவர், புதிதாக வெளியாகிருந்த தனது இரண்டு புத்தகங்களை எடுத்து அவன் முன்னல் போட்டு “இதையெல்லாம் படியய்யா” என்றார்.

ஒரு புத்தகத்தை விரித்தான். நல்ல பண்பாடு உள்ள கதை அது! “வாழ முடியாதவர்கள்” என்ற தலைப்பில் வெளியாகிருந்தது. கதையென்ன தெரியுமா? விவரமாக சொல்கிறேன்.

மனைவியை இழந்த ஒரு போலீஸ்காரன். வறுமை தவழ்ந்து விளையாடும் சின்னஞ்சிறு வீடு அவன் குடியிருப்பு. மாண்டுபோன அவன் மனைவி சும்மா போகக்கூடாதென்று ஒரு மகளை விட்டுப் போயிருந்தாள். கதையின் ஆரம்பத்திலேயே அந்த மகள், தளதளவென்று வளர்ந்து பளபளவென்று வெருகேறிக் கவர்ச்சிப் பாவையாக விளங்குகிறாள். சின்னஞ்சிறிய வீட்டில் தன்னந்தனிய்ஆக இருக்குமவள் திருமணத்திற்காகக் காத்துக் கிடக்கிறாள். இரவுகள் வந்துபோகின்றன; திருமணம் வரவில்லை. ஒவ்வொர் இரவிலும், தந்தையும் மகளும் மட்டுமே அந்த வீட்டில் துயில்கின்றனர். அவளோ கல்யாணமாகாதவள்; அப்பனோ மனைவியை இழந்தவன். தந்தை மகளையே மனைவியாக்கிக் கொள்கிறார்.

பண்பாடற்றவர்களெனக் கருதப்படும் வெளிநாட்டவர் கூட, வறுமையைச் சித்தரித்துக் கதையெழும்போது, பண்பாட்டோடு எழுதினார்கள்.
ஆனால், மகளைக் கெடுத்த தந்தையை வறுமைக்கு உதாரணமாக்கினார் ‘முற்போக்குக்’ கதாசிரியர்.

தமிழ்ச் சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பற்றிய பயம் அவன் நெஞ்சில் சூழ்ந்தது. அடுத்தடுத்து ‘குமரிக்கோட்டம்’, ‘ரோமாபுரி ராணிகள்’, ‘கபோதிபுரக் காதல்’ முதலிய நூல்களைப் படித்தான். அந்த நூல்களில், பலரிடம் கெட்ட ஒருத்தியை பளபளப்பாக வருணித்திருந்தார் கட்சியின் மூலத் தலைவர்.

சமுதாயத்தில் தாழ்ந்துகிடப்போர், மேலெழ வேண்டும் என்ற நன் நோக்கத்திற்கு, இவை எவ்வகையில் துணை புரியும்? எழுதுகின்றவ்அனின் வெறித்தனத்தை இவையுணர்த்துமேயல்லாது, நாட்டுக்கு என்ன பயன் தரும்? பொது இடத்திலோ, குலமகளிர் மத்தியிலோ வைக்கக் கூடாத அளவுக்குப் பகுத்தறிவு வீரர்கள் புத்தகமெழுதுவானேன்?

பண்பு குன்றாத பங்கிம்சந்திரர், சாகாவரம் பெற்ற சரத்சந்திரர், நாடக அமைப்பில் கதையெழுதிய ரவீந்திரநாத் தாகூர் இவர்களெல்லாம், வங்காளம் போற்றிப் புகழும் இலக்கிய மேதைகள். இவர்களுடைய கதைகளையெல்லாம் படிக்கும்போது பண்பாட்டுக்குப் பெயர்போனது உலகத்திலேயே வங்காளம் தான் என்று எண்ணத் தோன்றுகிறது. வங்கத்தின் இருண்ட பகுதியை அவர்கள் காட்டவே இல்லை. ஒளி முகுந்த குடும்ப வாழ்க்கையையே உன்னதமாகச் சித்தரித்தார்கள்.

கட்டுப்பாடான குடும்ப வாழ்க்கையை மேற்கொள்ள விரும்பும் ஒருவன், தன் குடும்பம் முழுவதும் தன்னிடத்தே பக்தி கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணும் ஒருவன், தான் வங்காளத்தில் பிறந்திருகக்கூடாதா என்று ஆசை கொள்ளும் அளவுக்கு, வங்க இலக்கிய ஆசிரியர்கள் கதைகளைச் சமைக்கின்றனர்.

மாளிகையைப் பார்க்க வந்தவன் மாட்டுக் கொட்டகையை ரசிப்பதுபோல், ஒளி உலகைக் காணவந்த சீர்திருத்தவாதிகள், இருண்ட பகுதிகளையே சுவைத்து எழுதினார்கள். அவற்றை ‘ஆபாசம்’ என்ற கணக்கில் அவன் சேர்க்க வரவில்லை. அவை என்ன பயன் தரும் என்பது தான் அவன் கேள்வி. அன்றிலிருந்தே, கட்சியின் முக்கியஸ்தர்கள் எழுதும் கதை, கட்டுரைகளை அவன் படிப்பதில்லை.

ஓடிப்போனவள் கதையும், உருப்படாதவள் வாழ்க்கைச் சித்திரமும், ஆட்டங்கண்ட கிழவனுக்கெழுந்த ஆசையும், அந்தி நேரத்துச் சுந்தரியின் தளுக்கும் நிரம்பி வழிந்த கழகப் புத்தகங்கள், ஆயிரக்கணக்கில் விற்பனையாயின.

இளைஞர்களை அந்த மயக்கம் பற்றியது உண்மை. வெளியிலிருந்து வந்த விமர்ச்சனங்களை வெறுத்தொதுக்கி அவற்றை இளைஞர்கள் விரும்பிப் படித்தார்கள். நாகரிகம் மிகுந்த ஒரு சமுதாயத்தின், அழிவுக் காலம் அதிலேதான் தொடங்கிற்று என்றும் சொல்லலாம்.

கருணாநிதியின் குள்ளநரி தந்திரம்

நெல்லை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக விளங்கிய தோழர் கே.வி.கே. சாமி, தனியாகச் சில கூட்டங்களில் பேசவேண்டுமென்று அவனை அழைத்திருந்தார். அவனது திருமணம் முடிந்து சில மாதங்களே ஆகியிருந்தன. பொது வாழ்க்கையில் பிடிப்பில்லாத நிலையிலேயே அவன், அந்தக் கூட்டங்களில் பேச ஒப்புதலளித்திருந்தான். நாளை கூட்டம். இன்று அவன் புறப்பட்டாக வேண்டும்.

“இன்று நான் தூத்துக்குடிக்குப் புறப்படுகிறேன்” என்று அவனுடைய நண்பருக்குச் சொன்னான். “நீ தனியாக போய் என்ன பேசமுடியும்? உனக்கு என்ன பேசத் தெரியும்? எதற்கிந்த வீண் வேலை? வர இயலவில்லையென்று தந்தி கொடுத்துவிடு” என்றார் அவர். தன்னைத் தவிர யாருக்கும் பேரும் புகழும் வரக்கூடாதென்பதிலே அவர் மிகுந்த அக்கறை காட்டுவார். இன்னொருவன் முன்னுக்கு வராமலிருப்பதெஎ, தான் வாழ் வழியென்பது அவரது சித்தாந்தம்.

இவை அவனுக்குத் தெரிந்திருந்திருந்தும் கூட, தூத்துக்குடிக்குப் போகாமலிருக்க முடிவு கட்டினான். அந்த முடிவுக்கு இன்னொரு காரணம், அவனது சோம்பலுமாகும். ‘வர இயலவில்லை’ என்று தூத்துக்குடிக்குத் தந்தி கொடுத்தான். கூட்டங்கள் இரத்து செய்யப்பட்டன. அன்று மாலை அந்த அரசியல் நண்பர், வடசென்னையில் ஒரு கூட்டத்தில் பேசுவதாக இருந்தது. அதற்கு அவனையும் அழைத்துச் சென்றார்.

கவனித்தீர்களா! அவரை அவர் கூட்டத்துக்கு போகவிடாமல் செய்து விட்டு இவர் கூட்டத்துக்கு அழைத்துச் செல்கிறார். இங்கு இன்னொரு சம்பவத்தை சொல்லியாக வேண்டும். அச்சம்பவத்தை தான் ஜெயலலிதா சில நாட்களுக்கு முன் தன் அறிக்கையில் சொல்லியிருந்தார். புதிதாக தொடங்கப்படவிருந்த தி.மு.க கட்சிக்காக ஒரு கூட்டம் சென்னையில் நடந்தது. அப்போது கண்ணதாசனும் கருணாநிதியும் சேலத்தில் இருந்து சென்னை வந்து, பின் திரும்பி செல்கையில் முதல் வகுப்பு கட்டணத்தில் ரயில் பயணம் செய்தார்கள். இருந்த பணம் ரயில் டிக்கெட்டிற்கும் காப்பி, சிகரெட்டிற்கும் சரியாக இருந்தது. கண்ணதாசனுக்கோ பசியை அடக்க முடியவில்லை. அப்போது இவர்கள் அருகில் இருந்த வயதானவர் கழிவறைக்குச் சென்றார். அப்போது கருணாநிதி வயதானவர் அங்கு வைத்துவிட்டுச் சென்ற பழக்கூடையை காண்பித்து, ‘திருடலாமா’ என்று கேட்டார். தமிழின தலைவனின் யோக்கியத்தை நீங்களே பாருங்கள்!

போலி திராவிடம் – அண்ணாவின் சரிவு

கண்ணதாசன் தொடருகிறார்;
அவன் மேடை மீது ஏறிவிட்டால் சாமியாடும் பூசாரியைப்போல் ஆடித் தீர்ப்பான். ‘அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு’ – என்ற முழக்கத்தின் ஓசை நயம் அந்தப் பிஞ்சு மனத்தின் ஆசை நயத்துக்கும் தூபம் போட்டது. பின்நாளில் திரு. சம்பத் சொன்னது போல் ‘அது ஒரு பயங்கரமான அரசியல் மோசடி’ என்பதை யாரும் சிந்திக்கக்கூட இல்லை. கட்சியின் மீது நம்பிக்கை; கருத்துக்களின் மீது நம்பிக்கை; தலைவர் மீது பக்தி – அது ஒரு கட்சியாக இல்லை; மதமாகவே இயங்கிற்று.

1957-ல் நடைபெற்ற திருச்சி மாநில மாநாடு அவன் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். ஏனென்றால் கட்சியின் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்கள் சரியத் தொடங்கிய கட்டம் அதுதான். அந்த மாநாட்டிலேதான் – தான் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லவென்றும் – பார்பனீயத்துக்கே எதிரியென்றும் அண்ணாத்துரை பேசினார். அந்தப் பேச்சுக்குக் காரணம் உண்டு. முன்னாலெல்லாம் பதவி தேடுவோர் – பட்டுப் பூச்சிக்கள் – வெட்டுக் கிளிகள் என்று பேசி வந்த அவர் – அந்த மாநாட்டில் தேர்தலில் கலந்து கொள்வது பற்றி ஓட்டெடுப்பு நடத்தினார். ‘கலந்துகொள்ள வேண்டும்’ என்பதற்குச் சாதகமாக ஓட்டுகள் கிடைத்தன. அது எதிரிப்பார்த்ததுதான். அந்த நம்பிக்கையோடுதான் அவர் வாக்கெடுப்பு நடத்தினார். ஆகவே மாநாடில் தனது இறுதிப் பேச்சை வாங்கப் போகிற ஓட்டுக்குச் சாதகமாகத் திருப்பினார்.

பார்ப்பனர்கள் என்னதான் ஆதிக்க வெறியர்களாய் இருந்தாலும் – அவர்களுக்கு ஓட்டுரிமை இருக்கிறதல்லவா? அந்த ஓட்டும் அவருக்குத் தேவை அல்லவா? அதுவும் அது கூட்டமாக வந்து விழுகிற ஓட்டு அல்லவா? அதோடு அந்த நேரத்தில் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் காங்கிரசோடு முரண்டிக் கொண்டிருந்தார் அல்லவா!

விடுதலை வீரன் அண்ணாத்துரை ராஜ தந்திரியாகத் தொடங்கினார். சமுதாயக் கருத்துக்கள், நாத்திகக் கருத்துக்கள் மெல்ல அவரிடம் இருந்து விடைபெறத் தொடங்கின. கொள்கையின் முதற்கட்டச் சரிவை துவக்கி வைத்தது திருச்சி மாநில மாநாடு.

அண்ணாவின் ‘நேர்மை’ கருணாநிதியின் ‘சுய’மரியாதை

இந்த நிலையில் சென்னை மாநகர் மன்றத் தேர்தல் வந்தது. பொதுத் தேர்தல் முடிந்து திருக்கோஷ்டியூரில் அவன் தோல்வியுற்று, சென்னைக்குத் திரும்பிய உடனேயே சென்னையில் திராவிட முன்னேற்றக் கழக்கத்தின் வெற்றியைக் கண்டான். அப்போதே ‘தென்றலில்’ ஒரு தலையங்கம் எழுதினான். ‘அடுத்த மாநகர் மன்றத் தேர்தலில் முன்னேற்றக் கழகத்தவரே மேயராக வருவார்’ என்று அதில் அவன் குறிப்பிட்டான்.

அந்த நம்பிக்கையைத் துணைகொண்டு இப்போது தேர்தல் வேலைகளில் இறங்கினான். அந்தத் தேர்தலில் சென்னையில் தி.மு.க.வுக்காக அதிகம் உழைத்தவர்கள் அவனும் நடிகர் டி.வி.நாராயணசாமியுமேயாவர். உடலுழைப்பு, வாகன உதவி, பொருள் உதவி அனைத்தும் அவர்கள் இருவருமே செய்தார்கள். சிவகெங்கைச் சீமைப் படம் வெளிவருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் தேர்தல் நடந்ததால் அவன் கையில் அதிகப் பணப்புழக்கம் இருந்தது. பல தொகுதிகளில் இவன் தன் பணத்தைச் செலவழித்தான். காய்கறிகளுக்குப் போடப் பட்டிருந்த வரிகளையே பிரச்சாரத்திற்குப் பொருளாகக் கொண்டான். அவன் எதிர்பார்த்ததுபோல் தி.மு. கழகம் பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. அண்ணாத்துரையே திகைத்தார். ஏனென்றால் அவர் எதிர்பார்க்கவில்லை. வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பலர் அவனது கம்பெனிக்கே முதலில் வந்து அவனுக்கு நன்றி தெரிவித்துவிட்டுப் போனார்கள்.

கடற்கரையில் மாபெரும் பாராட்டுக் கூட்டம். வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள். நடுவிலே அண்ணாத்துரை. அவர் பக்கத்திலே கருணாநிதி. கவுன்சிலர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். பலர் பாராட்டிப் பேசுகிறார்கள். தேர்தலில் கடுமையாக உழைத்த அவனும் மற்றவர்களும் அனாதைகள்போல் ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறார்கள். கருணாநிதி பேசுகிறார். அந்த வெற்றிக்குத் தானே கஷ்டப்பட்டவர்போல் பேசுகிறார். இவ்வளவுபேர் ஜெயிப்பார்கள் என்று ஏற்கனவே தனக்குத் தெரிந்ததாகவே பேசுகிறார்.

அடுத்தாற்போல் அண்ணாத்துரை சென்னை மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். காங்கிரசை வீழ்த்திவிட்ட பெருமையைப் பேசுகிறார். வெற்றிக்காக உழைத்தவர்கள் பட்டியலைச் சொல்கிறார். அதில் தன் பெயரும் வரும் என்று அவன் காத்துக்கொண்டிருக்கிறான். அந்தோ, அப்படி ஒருவன் உலகத்தில் இருப்பதாகவோ, அவன் தேர்தலில் உழைத்ததாகவோ அவர் சிந்திக்கக்கூடவில்லை; அது மட்டுமா அவர் செய்தார்? வருணனைகளோடு ஒரு விஷயத்தை ஆரம்ப்பித்தார்.

“நான் என் மனைவிக்கு நகை வாங்கக்கூட கடைக்குச் சென்றதில்லை. எனக்கென்றுகூட நான் நகைக் கடை ஏறியதில்லை. இன்று மதியம் வேகாத வெய்யிலில் ஊரெங்கும் அலைந்து கடையெங்கும் தேடி வாங்கி வந்தேன் ஒரு கணையாழி; அந்தக் கணையாழியை இந்த வெற்றியை ஈட்டித்தந்த என் தம்பி கருணாநிதிக்கு அணிவிக்கிறேன்.” கூட்டத்தில் பெருத்த கையொலி. ‘கருணாநிதி வாழ்க!’ என்ற முழக்கம். அவன் கூனிக் குறுகினான். பயன் கருதாத உழைப்பு. அரசியலில் எப்படி அலட்சியமாக ஒதுக்கப்படும் என்பதை அப்போதுதான் அவன் கண்டான்.

பெரிய ஜாதிக்காரனையும் சிறிய ஜாதிக்காரனையும் ஒரே மாதிரியாக எப்படி ஜாதிவெறி ஆட்டி வைக்கிறது என்பதை அன்று அவன் நேருக்கு நேர் பார்த்தான். அண்ணாத்துரை அவன் இதயத்திலிருந்து சரியத் தொடங்கினார். அவரை வரம்புமீறிப் புகழ்ந்துகொண்டிருந்த அவன் உள்ளத்தில் அன்றுதான் அவரைப்பற்றிய கசப்பான எண்ணம் உதயமாயிற்று. ஒரு களங்கமற்ற பக்தனை அன்று அவர் இழக்கத் தொடங்கினார். அவன் இதயம் நெருப்பாகவே எரிந்தது. கூட்டம் முடிந்து அவர் கடற்கரை மரக்கலத்தின் மீது போய் அமர்ந்தார்.

அவன் நேரே அவரிடம் போனான். “என்ன அண்ணா! இப்படிச் சதி செய்துவிட்டீர்கள்?” என்று நேருக்கு நேரே கேட்டான். “அட நீயும் ஒரு மோதிரம் வாங்கிக்கொடு. அடுத்த கூட்டத்தில் போட்டுவிடுகிறேன்” என்றார். “அப்படித்தான் கருணாநிதியும் வாங்கிக் கொடுத்தாரா?” என்று அவன் கேட்டான். “அட சும்மா இரு. அடுத்த தேர்தல் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

அவன் அவரிடம் சொல்லிக்கொள்ளாமலே நடக்கலானான். அவன் கண்களில் நீர் மல்கிற்று. பயன் கருதி அவன் உழைக்கவில்லை என்றாலும். உழைத்தவனுக்கு ஒரு நன்றி கூட இல்லையே என்று கலங்கினான்.

உட்கட்சிக் குழப்பம் – சுயநல தலைவர்கள்

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் புதிய பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக லாயிட்ஸ் ரோட்டில் ஒரு கட்டத்தில் கூடினார்கள். அன்றைக்குச் சம்பத்தின் கைதான் வெகுவாக ஓங்கியிருந்தது. அன்று அவர் விரும்பியிருந்தால் – அவர்தான் பொதுச் செயலாளர். அப்படி இருந்தது அன்றைய நிலைமை. அண்ணாத்துரையே நடுங்கிக்கொண்டிருந்தார். துணைக் குழுக்களுக்கான தேர்தல் அங்கு நடந்தபோது எல்லாக் குழுக்களிலும் சம்பத்தின் ஆதரவாளர்களுக்கே ஏராளமான வாக்குகள் கிடைத்த.

மதியழகனைப் பொதுச்செயலாளராக்குவது என்று சம்பத் எடுத்துக்கொண்ட. முடிவிற்கு, அங்கே பெருத்த ஆதரவிருந்தது. கருணாநிதியும் அவரது ஆதரவாளர்களும் கலங்கிப்போய் இருந்தார்கள். எல்லோரும் சம்பத்தையே சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அண்ணாத்துரை சம்பத்தை தனியே அழைத்துக்கொண்டு போனார். உண்மையிலேயே கண்ணீர்விட்டு அழுதார். “இந்தத் தடவை மட்டும் நான் பொதுசெயலாளராக இருந்துவிடுக்கிறேன். நமக்குள்ளே தகராறு இருப்பதாக யாருக்கும் தெரிய வேண்டாம்” என்றார்.

தன்னாலே ஏற்றி வைக்கப்பட்ட ஒரு மனிதர், தன் கையைப் பிடித்துக்கொண்டு அழுகிறார் என்ற உடனேயே சம்பத் செய்த முதற் பெருந்தவறு இதுதான். அவரைச் சுற்றி இருந்த பலபேரும் உறுதியாக நின்றபோது – அவரது இளகிய நெஞ்சம் அண்ணாத்துரையின் கண்ணீருக்குப் பணிந்துவிட்டது. பிறகு சம்பத்தே தன் ஆதரவாளர்களிடம் அண்ணாத்துரைக்கு விட்டுக் கொடுக்குமாறு கூறினார். அண்ணாத்துரை பொதுச்செயலாளராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

லாயிட்ஸ் ரோடு பொதுக்குழுவிற்குப் பிறகும் கட்சியில் சம்பத்தின் கையே ஓங்கி இருந்தது. அதைத் தகர்க்க அண்ணாத்துரை ரகசியமாகத் திட்டமிட்டார். திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னால் பொதுக்குழுவில் கண்ணீரைக் காட்டி தான் பெற்ற வெற்றியை கம்பீரமான வெற்றியாகக் கருதி திராவிடநாடு இதழில் மறைமுகமாக ஒரு கட்டுரை எழுதினார்.

அப்பொழுதும் சரி இப்பொழுதும் சரி, தி.மு.கழகத்தில் ஒருவரையொருவர் மறைமுகமாகத் தாகி எழுதுவது மிகவும் அதிகம். அது தொண்டர்களில் பலபேருக்குப் புரியாது. குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் புரியும். அந்தப் பாணியில் அண்ணாத்துரை சம்பத்தைக் கேலி செய்து ஆப்பிள் கார்ட் என்ற பெர்னாட்ஷா நாடகத்தை மையமாகக் கொண்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்பது அதன் தலைப்பாகும். அதை அவன்கூடப் படிக்கவில்லை. பொதுவாக அவன் அண்ணாத்துரையின் திராவிடநாடு பத்திரிகை உட்பட எந்த தி.மு.க பத்திரிக்கையையும் படிப்பதில்லை. காரணம் – அவர்களில் சத்தற்ற தமிழ்நடை தன்னைப் பற்றிக்கொள்ளக்கூடாதே என்ற பயம்.

அந்தக் கட்டுரை வெளிவந்த திராவிடநாடு இதழை அவன் முதலில் பார்க்கவில்லை. அவனது துணையாசிரியர் தியாகன் அதைப் படித்துவிட்டு அவனிடம் கொண்டுவந்து காட்டினார். “ இந்தப் ‘போனார்ஜியஸ்’ என்ற பாத்திரம் புயலார் என்ற பெயரில் மாற்றப்பட்டு சம்பத்தைக் கேலி செய்வது போல் எனக்குத் தோன்றுகிறது” என்று அவர் சொன்னார். அவன் அதை முழுக்க படித்துப் பார்த்தான். பொதுக்குழுவில் சம்பத் ஏமாந்துவிட்டதாகவும் தான் பெற்றி பெற்றுவிட்டதாகவும் மறைமுகமாக அண்ணாத்துரை அதில் கூறியிடுப்பதைக் கண்டுபிடித்தான்.

அண்ணாவின் ஆசிர்வாதத்துடன் கருணாநிதியின் ரவுடித்தனம்

தீர்மானங்கள் தயாரிப்பதில் சம்பத் கைதேர்ந்தவர். முறையற்ற தலைவர்களை தீர்மானங்கள் மூலமே அவர் சித்ரவதை செய்வார். லாயிட்ஸ் ரோடு பொதுக்குழு நடப்பதற்கு முன் நடைபெற்ற மாயவரம் பொதுக்குழுவில் ஒரு தீர்மானம் கொண்டுவந்து அண்ணாத்துரையையும் கருணாநிதியையும் அலற வைத்தவர் அவர். ஆகவே- இந்தத் தடவை வேலூர்ப் பொதுக்குழுவுக்கு தீர்மானம் தயாரிக்கிறார் என்றால் – அது கண்டிப்பாகப் பரபரப்பை உண்டுபண்ணும் என்பது அவனுக்குத் தெரியும்.

சம்பத்தின் ஆதரவாளர்கள் எல்லாம் வேலூர்ப் பொதுக்குழுவில் இந்தத் தீர்மானங்களை விவாதிப்பது பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரியாமலேயே கருணாநிதி ரகசியமாக ஒரு வேலை செய்து கொண்டிருந்தார். பொதுக்குழுவில் பெரும் ரகளை செய்வது என்று முடிவு கட்டி அண்ணாத்துரையின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டு மேல்மட்டத்தில் இருந்த அண்ணாத்துரையின் ஆதரவாளர்களுக்கெல்லாம் தெரிவித்துவிடு, மற்றப் பொதுக்குழு உறுப்பினர்களை ஊர் ஊராகப் போய்ச் ச்ந்தித்து ஒவ்வொருவரையும் தயார் செய்து உருப்பினர் அல்லாத அடியாட்கள் சிலரையும் ஏற்பாடு செய்துகொண்டு பல கார்களில் எல்லோரையும் ஏற்றி முதல் நாளே வேலூருக்குக் கொண்டுவந்து சேர்த்துவிட்டு – தானும் அங்கேயே வந்துவிட்டார். இந்த ரகளைக்கு அண்ணாத்துரையும் கருணாநிதியும் திட்டமிட்டிருந்தது சம்பத் கோஷ்டியினரில் யாருக்குமே முன்கூட்டித் தெரியாது.

“செயற்குழுவில் அடிதடி நடக்கிறது. சம்பத்தை எல்லோரும் அடிக்கிறார்கள்” என்று சொன்னார். அவன் கலங்கிவிட்டான். அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு செய்ற்குழு நடக்குமிடத்திற்குச் சென்றார்கள். செயற்குழுவில் கலந்துகொண்டிருந்த எம்.பி. சுப்பிரமணியன் (எம்.எல்.ஏ) இறங்கி வந்தார். மதுரை சண்டியர் ஒருவர் சம்பத்தின் சட்டையைப் பிடித்ததாகவும் கருணாநிதி சத்தம் போட்டுத் திட்டியதாகவும் இரண்டு நடிகர்கள் முண்டா பனியனோடு வந்து நின்றதாகவும் அண்ணாத்துரை அழுததாகவும் அவர் சொன்னார்.

“உனக்காகவது சொத்து சுகம் இருக்கிறது சம்பத். அரசியலை விட்டால் வேறு எங்களுக்கு தொழில் ஏது?” என்று அன்பழகன் பரிதாபமாகக் கேட்டாராம். கட்சியில் இந்தக் குழப்பம் வந்ததனால் ‘வசூல் வேலை’ தடைப்படுகிரது என்று பலபேர் ஆத்திரமாக இருந்தார்களாம்.

“இப்போழுதே கட்சியில் இருந்து எல்லோரும் ராஜிநாமாச் செய்யவேண்டும்” என்றொருவர் கூறினார். மதியழகன்தான் இதில் தீவிரமாக இருந்தார். சம்பத் எல்லோரையும் அமைதிப்படுத்தினார். சம்பத் செய்த இரண்டாவது தவறு இது. தனது ஆதரவாளர்களின் ராஜிநாமா யோசனையை அன்றைக்கே அவர் ஒப்புக்கொண்டிர்உந்தால் அண்ணாத்துரையும் கருணாநிதியும் சம்பத்திடம் சரணடைய வேண்டியதிருக்கும். காரணம் அன்று பெரும்பான்மையான ஆதரவு சம்பத்துக்கே இருந்தது. நீலிக்கண்ணீர் வடித்து சம்பத்தின் ஆதரவாளர்கள் பலபேரைத் தன்பக்கம் இழுப்பதற்கு அண்ணாத்துரைக்கு ஒரு வாய்ப்பை சம்பத் கொடுத்துவிட்டார்.

கருணாநிதி ஒன்றும் அறியாத கன்னிபோல் உட்கார்ந்திருந்தார். அண்ணாத்துரை உருக்கமாகவே தனது பேச்சை ஆரம்பித்தார். “கட்சியில் குழப்பம் வந்து ஏதாவது ஆகுமென்றால் என்னை உயிரோடு காண முடியாது” என்று அவர் கூறியதும், “ஐயோ அண்ணா” என்று சிலபேர் அழுதார்கல். அழுதவர்களின் நடிப்பு, அண்ணாத்துரையின் நடிப்பையும் மிஞ்சி நின்றது. அவன் மட்டும் புன்னகை புரிந்துகொண்டிருந்தான் . உண்மைக்கும் நடிப்புக்கும் உள்ள வித்தியாசத்தை ஓரளவு கண்டுகொள்ளக் கூடியவன்தானே அவன். அவன் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து பலபேர் ஆத்திரமாகக் கத்தினார்கள்.

இந்த அடிதடியெல்லாம் முடிந்து, சம்பத் அமைதியாக போனதால், கட்சியில் தற்காலமாக அமைதி திரும்பிய. பின் கண்ணதாசன் ஒரு முறை திருச்சி கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது கருணாநிதி ஆதரவாளன் ஒருவனால் தாக்க முற்பட்டார். அந்த காலிப் பயல் மாலை போடுவது போல் வந்து கண்ணதாசனின் சட்டையைப் பிடித்தான். பின் மறைத்து வைத்திருந்த செருப்பை எடுக்கும் போது, கண்ணதாசன் அவனை உதைத்து மேடைக்கு கீழே தள்ளிவிட்டார். பின் சிரித்துக் கொண்டு அரைமணி நேரம் மேடையில் பேசினார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து சம்பத் உண்ணாவிரதம் இருந்தார். மூன்று நாள் இருந்த உண்ணாவிரதத்தினால் சம்பத் மிகுந்த பலவீனமடைந்தார். அண்ணா பதட்டம் அடைந்தார். எங்கே சம்பத்துக்கு எதாவது நடந்து அது அவர் தலைமையை பாதிக்குமோ என்று எண்ணியோ என்னவோ அண்ணா கட்சியில் நடக்கும் ரவுடித்தனங்களை கண்டிப்பதாகவும் தடுப்பதாகவு உறுதி கூறி சம்பத்தின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்.

இதன் பின் அண்ணாத்துரையின் மனப்போக்கில் மாறுதல் ஏற்பட்டது. கட்சியில் அனைவரையும் அரவணைத்து செல்ல முயற்சி செய்தார். அதற்காக காவலர் கூட்டம் என்பதனை கூட்டினார். அதில் இவ்வளவு கலகம் ஏற்பட்டதற்கு காரணமானவர்கள் தன்னிடம் தனியே வந்து வருத்தம் தெரிவித்தால் கூட போதும் என்று கூறினார். கண்ணதாசன் அந்தச் சூழ்நிலையில் தான் ஒருவன் மன்னிப்பு கேட்டாலே போதுமானது என்று கருதினார். (ஏனெனில் அவர் தான் திருச்சியில் தாக்குதலுக்கு உள்ளானார்). அவர் எழுந்துச் சென்று அண்ணாவின் கையைப் பிடித்துக்கொண்டு “இதில் நான் தவறு செய்திருந்தால் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கண்ணீர் சிந்தினார். அண்ணாவின் கைகளை கண்களில் ஒற்றிக்கொண்டார். அண்ணாவும் அவரது கைகளை முத்தமிட்டார். பின் கண்ணதாசனை தோளில் தூக்கிக்கொண்டு மிட்டாய் கொடுத்து கொண்டாடினார்கள்.

பின் அண்ணா, தொண்டர்கள் மத்தியில் அமைதி ஏற்படுத்துவதற்காக தான், சம்பத், கருணாநிதி மற்றும் கண்ணதாசன் நால்வரும் ஊர்தோரும் சென்று கூட்டம் நடத்தினால் நல்லது என்று ஆலோசனை கூறினார். ஆனால் நடந்தது என்னவோ…..

கண்ணதாசன் எழுதுகிறார்;

அந்த வகையில் அண்ணாத்துரை மிகத் தெளிவாக இருந்தார். ஆனால். கட்சியை எப்படியும் உடைத்தே தீருவது என்று முடிவு கட்டியிருந்த கருணாநிதி அந்தக் கூட்டங்கள் நடைபெறாமல் தடுப்பதில் முனைந்தார். பலவீனமான அண்ணாத்துரையின் இதயம் மீண்டும் சலனமடையுமாறு மாற்றுவதில் அவர் வெற்றி பெற்றார். சுயமாக சிந்துக்கிற சக்தியையே அவர் அப்போது இழந்திருந்தார். அவரை விஷமாக்குவதில் கருணாநிதி வெற்றி பெற்றார்.

இவ்வளவு நாளாக அனைத்துப் பத்திரிகைகளும் அண்ணா ‘எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்’ என்று தான் எழுதிகொண்டிருக்கிறார்கள்.

நண்பர்களே இதற்கு நான் என்ன சொல்ல! நீங்களே அனைத்தையும் புரிந்து கொண்டிருப்பீர்கள். அண்ணாவையும் கருணாநிதியையும் பற்றி இங்கு படித்து என்னைப் போல் அதிர்ச்சி, ஏமாற்றம், கோபம் என அனைத்தையும் ஒரு சேர அனுபவித்திருப்பீர்கள். இதெல்லாம் நம் போன்ற இளம் தலைமுறைக்கு தெரியாமல் இருந்தது. அல்லது நாம் தெரிந்து கொள்ளாமல் விட்டு விட்டோம். இனியாவது நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். யார் நமது தலைவன் என்பதை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கவேண்டும்.

நன்றி.