மறுபடியும் நனைந்தேன் ...!


மழையில் நனைந்துகொண்டே

வீட்டுக்கு வந்தேன்...!


குடை எடுத்துட்டுப் போகோ வேண்டியதுதனே,

என்றான் " என் தம்பி "


எங்கேயாவது ஒதுங்கி நிக்க வேண்டியதுதனே,

என்றாள் " என் தங்கை "


சளி பிடிச்சுகிட்டு செலவு வைக்கப்போறோ பாரு

என்றார் " என் அப்பா "


என் தலையை துவட்டிக் கொண்டே

திட்டினால் "அம்மா "

என்னையல்ல மழையை ...!


மறுபடியும் நனைந்தேன் என் அம்மாவின் அன்பு மழையில்...!

விவேகானந்தர் அருளிய பொன்மொழிகள்!


 • நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் (அதற்காக சிங்கமாக ஆக வேண்டும் என் நினைத்தால் அது முடியாது). உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை).
 • உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" "'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.
 • பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!
 • கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.
 • உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.
 • அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.
 • மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்.
 • சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
 • நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.
 • அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.
 • உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்.
 • உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

எந்தாயி...!

வேலைக்கு போயிட்டு வந்து
அக்கடான்னு நீ உக்காரையில
ஃபீஸ் கட்டணும்பேன்
ஒடனே முந்தான முடிப்புலருந்து
ரூவா தருவியே அதுக்காகவாவது,

ஊர சுத்திட்டு நான் வரைல
நீ சாப்பிடரத பாத்து
உன் தட்ட புடுங்கிட்டு
வேற போட்டுக்கோம்பேன்
நாஞ்சாப்பிட வரைல சும்மா இருந்திட்டு
அப்பறம் சொல்லுவியே
சாப்பாடு முடிஞ்சிதுன்னு அதுக்காகவாவது,

கண்ணாடி பாத்து நாந்தல சீவயில
பின்னாலிருந்து திடும்னு தலைக்கு
எண்ண தேச்சு விடுவியே அதுக்காகவாவது,

வீட்டுல கறி சமைச்சா யாருக்கும் தெரியாம
சோத்துக்குள்ள மறச்சு ரெண்டு துண்டு
அதிகந்தருவியே அதுக்காகவாவது,

ராவுல நான் குளிருல
நடுங்கையில கேக்காமலே
போத்தி விடுவியே அதுக்காகவாவது
இன்னொருக்கா ஓன்வகுத்துலயே
பொறக்கோணுந்தாயி ...!

என்னது தேர்தல் முடிவுகள் வந்திடுச்சா?!


சுமாரா உங்க நாடகம் எத்தனை மணி நேரம் ஓடும்? ஒரு 2 மணி நேரம் ஒடும்! அப்ப 2 மணி நேரமும் சுமாராத்தான் இருக்கும்னு சொல்றீங்க!

**********************************************************************************

அவர் விபத்துன்னா ரொம்ப பயப்படுவார் அதனால கொஞ்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அதிகமாவே இருக்கும்! முன்னெச்சரிக்கைன்னா என்ன செய்வார்? உதாரணத்துக்கு சொல்லணும்னா சலூனுக்கு போகும்போது கூட ஹெல்மெட் போட்டுட்டுத்தான் போவார்னா பாத்துக்கங்களேன்.

********************************************************************************

தலைவர் ஓட்டுக்குப் பணம் கொடுக்கறதை எவ்வளவு நாசுக்காச் சொன்னாரு கவனிச்சியா? கவனிக்கலையே! "என்னை என் குடும்பத்திற்காக உழைப்பவன் என்று கூறுகிறார்கள், நான் என் குடும்பத்துக்கு மட்டுமா சொத்து சேர்க்கிறேன், நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பத்திற்காகவும்தான் சொத்து சேர்க்கிறேன்"

********************************************************************************

தலைவர்: வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தேங்காய் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன், மறந்துடாதீங்க தேங்காய் சின்னம்... தொண்டர்: தலைவரே! நம் சின்னம் தேங்கய் இல்லை! தலைவர்: எனவே... தேங்காய் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

*********************************************************************************

ஏன் தலைவர் அந்த பாடலாசிரியரைப் போய் அடிக்கறாரு? கட்சிக்குத் தேர்தல் பிரச்சாரப் பாட்டு எழுதும்போது 'விவசாய வட்டி ரத்தானது ஜோர் ஜோர்தான்' அப்படீன்னு எழுதறதுக்குப் பதிலா 'விவசாயிகளுக்கு ரத்தானது சோறு சோறுதான்'-னு எழுதிட்டாராம்...!

*********************************************************************************

ஒரு பையன் எனக்கு முத்தம் கொடுத்தால்...?

ஒரு அமெரிக்க இளம்பெண் தன் தாயிடம் கேட்டாள் "அம்மா, என்னை ஒரு பையன் கட்டி பிடித்தால் என்ன செய்ய?"
தாய்: " DO NOT " என சொல்.
மகள்:
ஒரு பையன் எனக்கு முத்தம் கொடுத்தால்?
தாய்:
" STOP " என சொல்.
மகள்:
"சரி".
மறுநாள் கல்லூரி வாசலில் அவளை ஒருவன் திடீரென கட்டிபிடித்து முத்தம் கொடுக்க தொடங்கினான். அவள் சொன்னாள் " DO NOT STOP "

தாயே நீயே துணை!

மனதை கவர்ந்த டி சர்ட் வாசகம்...!