மறுபடியும் நனைந்தேன் ...!


மழையில் நனைந்துகொண்டே

வீட்டுக்கு வந்தேன்...!


குடை எடுத்துட்டுப் போகோ வேண்டியதுதனே,

என்றான் " என் தம்பி "


எங்கேயாவது ஒதுங்கி நிக்க வேண்டியதுதனே,

என்றாள் " என் தங்கை "


சளி பிடிச்சுகிட்டு செலவு வைக்கப்போறோ பாரு

என்றார் " என் அப்பா "


என் தலையை துவட்டிக் கொண்டே

திட்டினால் "அம்மா "

என்னையல்ல மழையை ...!


மறுபடியும் நனைந்தேன் என் அம்மாவின் அன்பு மழையில்...!

7 comments:

 1. அதுதான் உண்மையான தாயின் இலக்கணம் நீங்கள் கொடுத்துவைத்தவர் நல்ல தயை பெற்று இருக்கிறீர்கள் நல்ல ஆக்கம் பாராட்டுகள்.

  ReplyDelete
 2. அம்மாவின் அன்பு மழையில் அடிக்கடி நனைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. மறுபடியும் நனைந்தேன் என் அம்மாவின் அன்பு மழையில்...!nice..enjoy life with sweet mummy's love.

  என்னோட பதிவுல நீங்க பதில் சொல்லல.ஏன்? ஏதாவது வேணுமா?

  ReplyDelete
 4. நன்றி ராஜராஜேஸ்வரி...

  ReplyDelete
 5. உங்கள் ஆதரவு மட்டுமே போதும். நன்றி குணா...

  ReplyDelete
 6. supper............
  congratulation"

  ReplyDelete