என்னது தேர்தல் முடிவுகள் வந்திடுச்சா?!


சுமாரா உங்க நாடகம் எத்தனை மணி நேரம் ஓடும்? ஒரு 2 மணி நேரம் ஒடும்! அப்ப 2 மணி நேரமும் சுமாராத்தான் இருக்கும்னு சொல்றீங்க!

**********************************************************************************

அவர் விபத்துன்னா ரொம்ப பயப்படுவார் அதனால கொஞ்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அதிகமாவே இருக்கும்! முன்னெச்சரிக்கைன்னா என்ன செய்வார்? உதாரணத்துக்கு சொல்லணும்னா சலூனுக்கு போகும்போது கூட ஹெல்மெட் போட்டுட்டுத்தான் போவார்னா பாத்துக்கங்களேன்.

********************************************************************************

தலைவர் ஓட்டுக்குப் பணம் கொடுக்கறதை எவ்வளவு நாசுக்காச் சொன்னாரு கவனிச்சியா? கவனிக்கலையே! "என்னை என் குடும்பத்திற்காக உழைப்பவன் என்று கூறுகிறார்கள், நான் என் குடும்பத்துக்கு மட்டுமா சொத்து சேர்க்கிறேன், நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பத்திற்காகவும்தான் சொத்து சேர்க்கிறேன்"

********************************************************************************

தலைவர்: வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தேங்காய் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன், மறந்துடாதீங்க தேங்காய் சின்னம்... தொண்டர்: தலைவரே! நம் சின்னம் தேங்கய் இல்லை! தலைவர்: எனவே... தேங்காய் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

*********************************************************************************

ஏன் தலைவர் அந்த பாடலாசிரியரைப் போய் அடிக்கறாரு? கட்சிக்குத் தேர்தல் பிரச்சாரப் பாட்டு எழுதும்போது 'விவசாய வட்டி ரத்தானது ஜோர் ஜோர்தான்' அப்படீன்னு எழுதறதுக்குப் பதிலா 'விவசாயிகளுக்கு ரத்தானது சோறு சோறுதான்'-னு எழுதிட்டாராம்...!

*********************************************************************************

1 comment: