மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்...!
குடை எடுத்துட்டுப் போகோ வேண்டியதுதனே,
என்றான் " என் தம்பி "
எங்கேயாவது ஒதுங்கி நிக்க வேண்டியதுதனே,
என்றாள் " என் தங்கை "
சளி பிடிச்சுகிட்டு செலவு வைக்கப்போறோ பாரு
என்றார் " என் அப்பா "
என் தலையை துவட்டிக் கொண்டே
திட்டினால் "அம்மா "
என்னையல்ல மழையை ...!
மறுபடியும் நனைந்தேன் என் அம்மாவின் அன்பு மழையில்...!