தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் என்பது நமக்கு தெரியும், பேரறிவாளர்களால் தாமதிக்காமல் தரப்பட்ட நீதி... அநீதியான கதை தெரியுமா??


சதி என்றால் யாதும் அறியா படித்த பருவம் மாறுபொழுது 19 வயதில் கடைக்கு சென்று சொன்னதை - பேட்டரியை வாங்கிவந்து கொடுத்தமைக்காக, பேரறிவாளனுக்கு தூக்கு கயிறாய் திரிக்கப்பட்ட (அ)நீதி தான் அது தோழர்களே! பின் வேறு யாருக்கு நிகழும்....

இன உணர்வு இறுகி, எதிர்க்கும் எழுச்சியின்றி இருக்கும் தமிழனைத்தவிர?! நாட்டின் மானத்திற்கு ஒப்பான பாராளுமன்றத்தை தாக்கியவனெல்லாம், இந்திய அரசால் கோடிக்கணக்கில் செலவு செய்து பலத்த பாதுகாப்புடன் சுதந்திரமாக சிறையில் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.

இங்கே நம் தமிழின இளைஞன் - பேரறிவாளன் செய்யா குற்றத்திற்காக வாழ்க்கையை தொலைத்துக்கொண்டிருக்கும் 20 ஆண்டு கால தனிச்சிறைவாசமே கூடுதல் தண்டனை எனும்போது..... கொடிதினும் கொடியதாய் தூக்குக் கொட்டடிக்கு அவரை இட்டு செல்வதை மனசாட்சி உள்ளவர்களால் எப்படி பொறுத்துக்கொள்ளமுடியும்?

நிச்சயமாக தூக்கு தண்டனையில் இருந்து மட்டுமல்ல, வழக்கிலிருந்தே விலக்கப்படவேண்டும் என்பதே நியாயமான கோரிக்கை. பேரறிவாளணுக்காக...!

"அநீதிக்கெதிரான மனம் படைத்தவர்கள் இந்திய அரசுக்கெதிராக குரலெழுப்புங்கள்"

1 comment:

  1. மிகவும் சிறப்பான பதிவு பாராட்டுகள் இந்த செய்தியை தமிழம் முழுவது கொண்டு சேர்க்க வேண்டும் படித்த வர்களுக்கே இது தெரியவில்லை பாராட்டுகள் நீதிபதி கிருஷ்ண ஐயர் சொல்லியுள்ள கருத்துகளை சேர்த்து இருக்கலாம் நன்றி பாராட்டுகள்.

    ReplyDelete