சுயமரியாதை

தன் உடல் வியர்வையில்,
குடும்பத்திற்கான உணவைத் தேடுவது...

-நன்றி தமிழருவி மணியன்

எவ்ளோ பெரிய பூனை!


குரங்கு : அண்ணே, எதுக்கு அந்த ஆளை அடிச்சி கொன்னுட்ட..

புலி :
என்னை பார்த்து அவன் என்ன சொன்னான் தெரியுமா?

குரங்கு : என்ன அண்ணே சொன்னான்?

புலி :
" எவ்ளோ பெரிய பூனை! "
அப்படின்னு சொல்றான்...!

"கை" க்கு எதிராக கைகோர்ப்போம்... காங்கிரசைக் கருவறுப்போம்...


வருகின்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரசையும்,
அதன் கூட்டணிக் கட்சிகளையும் தோற்கடிப்போம்...

தொப்புள்கொடி உறவாம் நமது ஈழத்து சொந்தங்கள்

கொத்து கொத்தாக மடிந்தபோது, தடுத்து நிறுத்தாமல்,
சிங்கள அரசுக்கு ஆயுத உதவியும், இராணுவ உதவியும்,
செய்து நம் உறவுகளை கொன்று குவிக்க உதவிய காங்கிரஸ்
கட்சியை கருவறுப்போம்... -இது

"தொப்புள்கொடி உறவாம் நமது ஈழத்து சொந்தங்களுக்கு ஈமச் சடங்காக அமையட்டும்"
"தமிழினமே ஒன்றுபடுவோம் வெற்றி பெறுவோம்"

தேர்தல் அறிக்கை - அப்பனுக்கும், மகனுக்கும்...!

கருவறையில்:-

"பிரசவம் மற்றும் பால் பாட்டில்" (வெறும் பாட்டில்தான்) இலவசம்...

பள்ளியில்:-

"சீருடை மற்றும் முட்டை" (தேர்விலும்தான்) இலவசம்...

வேலையில்லா பட்டதாரிக்கு:-

"இளைப்பாற தொலைகாட்சி மற்றும் களைப்பாற குவாட்டர்" இலவசம்...

சமையலுக்கு:-

"அரிசி, பருப்பு மற்றும் அடுப்பு" (சிலிண்டர் கிடையாது) இலவசம்...

பயணத்திற்கு:-

"பயணச்சீட்டு மற்றும் பாப்கான்" இலவசம்...

சமயத்திற்கு:-

"ஆணுறை மற்றும் துணைவி" இலவசம்...

கல்லறையில்:-

"பிண ஊர்தி மற்றும் சாம்பலுக்கு டம்பளர்" இலவசம்...

உன் இறப்பு சான்றிதழ் கொடுத்தால் உனக்கு கிடைத்த இலவசங்கள் எல்லாம் இலவசம் "உன் மகனுக்கும்"