நேற்று இரவு நேரப் பயணத்தில்...!


நேற்று இரவு நேரப் பயணத்தில்,
எல்லோரும் உண்ணுவிட்டு உறங்க,

ஏனோ என் இமைகளும் மனமும்
உண்ணாவிரதம் இருந்து,
உறங்க மறுத்தன!!!

எதிர்ப்பார்ப்பு ஏமாற்றத்தைத் தருமாமே?
நம்பவில்லை நான்!
ஆறுதல் கூற உன்னை எதிர் பார்த்தபோது..!


அப்போது, என்னைக் கவிஞனாய் மாற்றியது
உன் பிரிவு தான் என்றாலும்,
இந்த உலகத்தில் கவிஞனுக்கா பஞ்சம்?
வெறும் மனிதனாகவே இருந்துவிடுகிறேன்..!

3 comments:

 1. ஏனோ என் இமைகளும் மனமும்
  உண்ணாவிரதம் இருந்து,
  உறங்க மறுத்தன!!!
  nice

  ReplyDelete
 2. அப்போது, என்னைக் கவிஞனாய் மாற்றியது
  உன் பிரிவு தான் என்றாலும்,
  இந்த உலகத்தில் கவிஞனுக்கா பஞ்சம்?
  வெறும் மனிதனாகவே இருந்துவிடுகிறேன்..


  arumaiyaana varikal...
  valththukkal..

  ReplyDelete