உங்கள் அன்புக்குரியவள் உங்களை சுற்றி வர ( 21+ )

கடவுள் எல்லாவற்றையும் கொடுத்தாலும் அவர் கொடுத்த ஆறாம் அறிவை ஒழுங்காக பயன்படுத்தாமையால் வருகிற வினைதான் சிக்கல்கள். ஒரு குடும்பத்தில் சிக்கல்கள் என்றால் அடிப்படையான காரணத்தை பார்த்தால் பிரதானமாக இருப்பது திருப்தியற்ற தாம்பத்திய உறவு தான். எனவே சுமூகமான செக்ஸ் நிச்சயம் ஒரு சந்தோசமான வாழ்க்கைக்கு உதவும். அதற்கு சிறந்த விழிப்புணர்வு அவசியம். அது தொடர்பான சில டிப்ஸ்.


1 )சுயநலகாரனாய் இருக்க வேண்டாம்
இந்த விடயத்தில் பெருன்பான்மையான சமயத்தில் ஆண்களின் ஆதிக்கமே கொடிகட்டி பறக்கிறது.அதாவது ஆண்கள் தான் எஜமானர்களாகவும் பெண்கள் அடிமைகளாகவும் உள்ளனர்.இது தவறு.ஆண் பெண் இருவரின் ஆதிக்கமும் சம அளவில் இருக்க வேண்டும். அதாவது ஆண் தனது இஷ்டத்துக்கு ஆட முடியாது.ஒவ்வொரு செயற்பாடும் இருவரின் மனம் ஒன்றியே நடக்க வேண்டும்.உதாரணமாக உடலுறவின் புதிய பரிமாணங் களை படைக்கிறேன் என்று கிளம்புபவர்கள் பலர் அதனால் தம் ஜோடி படும் துன்பங்களை அறிவதில்லை.எனவே ஆண் தனக்கு தோன்றும் விருப்பங்களை போல் தனது துணைக்கும் சில விருப்பங்கள் இருக்கும் என புரிந்து நிறைவேற்ற பழக வேண்டும்.

2 )புரிந்து கொள்ளுங்கள்
பெண்கள் மனதை அறிவது கடினம என்பார்கள். அதற்காக சும்மா விட முடியாது.குறிப்பாக இந்த விடயத்தில் அவர்களின் மனது உங்கள் சட்டை பையில் என்றால் நீங்கள் தான அவளது ஒரே ஒரு ஹீரோ. இதற்காக நீங்கள் இருவரும் திறந்த மனதுடன் இருக்க வேண்டும்.எந்த வெட்கமோ தயக்கமோ இருக்க கூடாது. நண்பர்களுடன் கதைப்பதை போல் இயல்பாக இருவரும் கதைப்பதின் மூலம் இருவரின் விருப்பு வெறுப்புக்கள் புரியப் பட்டு எந்த சிக்கலும் இல்லாமல் சுமூகமாக இருக்கும். நீங்கள் உங்கள் உங்கள் விருப்பங்களை திணிப்பதற்கு பதிலாக அவளின் விருப்பத்தை அறியுங்கள். அதே நேரம் உங்கள் விருப்பங்களின் தொடர்பான நிலைப்பாட்டையும் அறிய முயலுங்கள்.

3 )பச்சையாக கதைக்கலாம்
இது சற்று கடினமானது ஒன்று தான். நிங்கள் உங்கள் துணையுடன் மேற் கூறியவாறு இந்த விடயத்தில் ஒரு நல்ல புரிந்த்துனர்வை பேணுமிடத்து இது சுலபம். ஏனெனில் இப்படியான பேச்சுக்கள் இருவருக்கு நல்ல ஆரம்பத்தை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும். மேலும் இறுக்கமான மன நிலையில் இருந்தது ஒரு பார்க்கின்ற மனநிலைக்கு எடுத்து செல்லும். இது மேலும் உங்கள் துணையின் மனதை அறியவும் காட்டும் reactions இல் இருந்து அடுத்த கட்டத்துக்கு செல்வது தொடர்பாக நீங்கள் சிந்திக் கலாம். “I’d like to (blank) your beautiful (blank) while softly squeezing your (blank),”என்று சொலவதில் தவறில்லை. தமிழில் எழுதினால் மோசமாகி விடும் என்பதால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது.

4 )நல்ல சூழலை ஏற்படுத்துங்கள்
நிங்கள் தான் இதற்க்கு பொறுப்பு. எடுத்தோமா கவுத்தொமா என்று இல்லாமல் ஒரு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக சத்தம் இருக்க கூடாது.டிவி,ரேடியோ போன்றவற்றை நிறுத்தி விட வேண்டும். உங்களை ஒருவரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எவன் கதவை தட்டுவானோ, அல்லது நாங்கள் அபபடியிரிக்கிறோம் என்பதை கண்டு பிடித்து விடு வார்களோ என்று பயந்து கொண்டிருக்க வேண்டியது தான. இது தான் சில பெண்கள் தனிக்குடித்தனம் செல்ல விரும்பும் பிரதான காரணி. ஏனெனில் பெண்கள் மற்றவவர்கள் நம்மை கவனிப்பார்களோ என்று பயப்படுகின்றனர். அவர்கள் சுதந்திரமான சூழலையே விரும்புகின்றனர்.

5 )அவளை கடவுளின் வரமாக மதியுங்கள்
சிலர் பெண்களை எதோ செக்ஸ் இயந்திரம் போலவும் பெண்கள் இந்த உலகத்தில் இருப்பதே செக்ஸ் இக்கும் பிள்ளை பெறவும் தான என்று நினைக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் நிச்சயமாக சந்தோசமாக இருக்க முடியாது. முதலில் உங்கள் அனுபுக்குரியவளை கடவுள் உங்களுக்கு தந்த வரமாகவும் அவளூடாக தான் அவர் உங்களின் வாழ்கையை வசந்தமாக வைத்திருக்க போகிறார் என்பதை நீங்கள் புரிந்தது கொண்டாலே நீங்கள் அவளை கொண்டாட அவள் உங்களை கொண்டாடுவாள். எனவே அவளுடலை பாவித்து விட்டு எரியும் plastic tea cup போல நினைக்காமல் அதை உங்கள் மனதின் வடிவமாக பாருங்கள். பிறகு உங்கள் வாழ்வில் வசந்தம் மட்டும் தான்

No comments:

Post a Comment