Showing posts with label ஏக்கம்.... Show all posts
Showing posts with label ஏக்கம்.... Show all posts

எந்தாயி...!

வேலைக்கு போயிட்டு வந்து
அக்கடான்னு நீ உக்காரையில
ஃபீஸ் கட்டணும்பேன்
ஒடனே முந்தான முடிப்புலருந்து
ரூவா தருவியே அதுக்காகவாவது,

ஊர சுத்திட்டு நான் வரைல
நீ சாப்பிடரத பாத்து
உன் தட்ட புடுங்கிட்டு
வேற போட்டுக்கோம்பேன்
நாஞ்சாப்பிட வரைல சும்மா இருந்திட்டு
அப்பறம் சொல்லுவியே
சாப்பாடு முடிஞ்சிதுன்னு அதுக்காகவாவது,

கண்ணாடி பாத்து நாந்தல சீவயில
பின்னாலிருந்து திடும்னு தலைக்கு
எண்ண தேச்சு விடுவியே அதுக்காகவாவது,

வீட்டுல கறி சமைச்சா யாருக்கும் தெரியாம
சோத்துக்குள்ள மறச்சு ரெண்டு துண்டு
அதிகந்தருவியே அதுக்காகவாவது,

ராவுல நான் குளிருல
நடுங்கையில கேக்காமலே
போத்தி விடுவியே அதுக்காகவாவது
இன்னொருக்கா ஓன்வகுத்துலயே
பொறக்கோணுந்தாயி ...!

எது சொர்க்கம் ?

வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு!












சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !

சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து

நெரிசலில் சிக்கி

கடமை அழைக்க

காற்றோடு செல்கிறேன்

காசு பார்க்க !

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை மாறிப் போகுமோ ?
மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை பழகிப் போகுமோ ? வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை தொலைந்து போகுமோ ?


சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய் (zip file)
சுருங்கிப் போக
வாழ்க்கை தொலைந்து போகுமோ
மொத்தமும்! புரியாது
புலம்புகிறேன் நித்தமும்!
தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?

சொந்த மண்ணில்

சொந்தங்களோடு

சோறு திண்பவன் யாரடா ?
இருந்தால் அவனே சொர்க்கம் கண்டவனடா....